எச்சரிக்கை: பாஸ்போர்ட்டில் மாற்றம் செய்த இந்திய அரசு!

இந்திய பாஸ்போர்ட்டில் இருந்து குடியுரிமை என்ற சொல்லை இந்திய அரசு நீக்கியுள்ளதாக ஒரு போலியான செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.   

Written by - RK Spark | Last Updated : Jul 6, 2022, 08:56 AM IST
  • பாஸ்போர்ட் வெளியுறவு அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது.
  • பாஸ்போர்ட்டில் இருந்து குடியுரிமை என்ற சொல்லை இந்திய அரசு நீக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
  • இதனை அரசு தற்போது மறுத்துள்ளது.
எச்சரிக்கை: பாஸ்போர்ட்டில் மாற்றம் செய்த இந்திய அரசு! title=

ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு விமானத்தின் மூலம் பயணம் செய்ய கண்டிப்பாக பாஸ்போர்ட் தேவை.  அந்த பாஸ்போர்ட்டை எடுப்பது அவ்வளவு சுலபமானது அல்ல, அது ஒரு நீண்ட செயல்முறை மூலம் செல்ல வேண்டும்.  பாஸ்போர்ட் பெற நிறைய முயற்சி எடுக்க வேண்டும், அதற்கு நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும், உங்கள் தகவலை சரிபார்த்து போலீஸ் சரிபார்ப்புக்குப் பிறகுதான் பாஸ்போர்ட்டை நீங்கள் பெறமுடியும்.  பாஸ்போர்ட் வெளியுறவு அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது.   இந்நிலையில், பாஸ்போர்ட்டில் இந்திய அரசு மாற்றம் செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது.  

மேலும் படிக்க | Income Tax Raid: காங்கிரஸ் தலைவர் வீட்டில் ரெய்ட்: பல இடங்களில் வருமான வரி சோதனை

அதில் இனி பாஸ்போர்ட்டில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.  இவ்வாறு சமூக ஊடகங்களில் வைரலாகும் பாஸ்போர்ட்டில் மாற்றம் செய்ததாகக் கூறப்படும் செய்தியின் உண்மைநிலையை பிஐபி-ல் வெளியிட்டுள்ளது.  இந்த தகவலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அளித்துள்ள பிஐபி, வாட்ஸ்அப் செய்தியில் இந்திய பாஸ்போர்ட்டில் இருந்து குடியுரிமை என்ற சொல்லை இந்திய அரசு நீக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.  ஆனால் இந்தக் செய்தி முற்றிலும் போலியானது, பாஸ்போர்ட் தொடர்பான எந்த ஒரு உத்தரவையும் இந்திய அரசு வெளியிடவில்லை. எனவே இந்த பொய்யை நம்பி ஏமாற வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.

மேலும் இந்திய அரசாங்கமானது இதுவரையில் பாஸ்போர்ட் மாற்றம் குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.  பழைய பாஸ்போர்ட்டை வைத்திருந்தால்தான் புதிய பாஸ்போர்ட் கிடைக்கும் என்று தற்போது வைரலான செய்தியில் கூறப்படுவது முற்றிலும் போலியானது.  மேலும் எந்தவிதமான வைரல் செய்திகளின் உண்மை நிலையை அறிய பிஐபி-யின் அதிகாரபூர்வ வலைத்தளத்தை பார்த்து மக்கள் தெரிந்துகொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | கர்நாடக உயர்நீதிமன்றத்தின் கதவைத் தட்டிய ட்விட்டர்: மத்திய அரசுக்கு எதிராக வழக்கு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News