7th Pay Commission: ஜூலை மாதம் அதிகரிக்கிறதா அகவிலைப்படி, சமீபத்திய அப்டேட் இதோ

7th Pay Commission: ஏப்ரல்-மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான ஏஐசிபி எண்கள் இன்னும் வரவில்லை. இந்த எண்ணிக்கை 126க்கு மேல் சென்றால், அரசாங்கம் அகவிலைப்படியை 4% அதிகரிக்கக்கூடும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 27, 2022, 04:18 PM IST
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி வரக்கூடும்.
  • அகவிலைப்படியில் 4% உயர்வு சாத்தியம் என கூறப்படுகிறது.
  • ஊழியர்களின் அகவிலைப்படி 38 சதவீதமாக அதிகரிக்கக்கூடும்.
7th Pay Commission: ஜூலை மாதம் அதிகரிக்கிறதா அகவிலைப்படி, சமீபத்திய அப்டேட் இதோ title=

7வது ஊதியக்குழுவின் புதுப்பிப்பு: ஜூலை மாதத்தில் அரசு ஊழியர்களுக்கு இன்னும் சில நல்ல செய்திகள் கிடைக்கக்கூடும். அகவிலைப்படியில் அரசாங்கம் மற்றொரு உயர்வை அறிவிக்கக்கூடும். இதனால் மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியடைய மற்றொரு காரணம் கிடைத்துள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

2022 ஆம் ஆண்டிற்கான அகவிலைப்படியின் முதல் அதிகரிப்பு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. ஏஐசிபிஐ குறியீட்டின் அதிகரிப்பு காரணமாக ஜூலை மாதத்தில் அடுத்த திருத்தம் செய்யப்படலாம் என்று சமீபத்திய ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. 

டிசம்பர் 2021 இல், ஏஐசிபிஐ எண்ணிக்கை 125.4 ஆக இருந்தது. ஆனால், ஜனவரி 2022 இல், அது 0.3 புள்ளிகள் குறைந்து 125.1 ஆக குறைந்தது. பிப்ரவரி, 2022க்கான அகில இந்திய சிபிஐ-ஐடபிள்யு 0.1 புள்ளிகள் குறைந்து 125.0 ஆக இருந்தது. 

1-மாத சதவீத மாற்றத்தில், இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது 0.08 சதவீதம் குறைந்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு இதே மாதங்களுக்கு இடையே பதிவு செய்யப்பட்ட அதிகரிப்பி 0.68 சதவீதமாக இருந்தது. மார்ச் மாதத்தில், 1 புள்ளி ஏற்றம் காணப்பட்டது. மார்ச் மாதத்திற்கான ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் 126 ஆக உள்ளது. ஏப்ரல்-மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான ஏஐசிபி எண்கள் இன்னும் வரவில்லை. இந்த எண்ணிக்கை 126க்கு மேல் சென்றால், அரசாங்கம் அகவிலைப்படியை 4% அதிகரிக்கக்கூடும். 

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு மாஸ் செய்தி, ஜூலை ஊதியத்தில் பம்பர் ஏற்றம் 

ஜூலை மாதத்தில் அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரிக்கக்கூடும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. டிஏ மேலும் நான்கு சதவிகிதம் உயர்த்தப்பட்டால், ஊழியர்களின் அகவிலைப்படி 38 சதவீதமாக அதிகரிக்கும். 

மார்ச் ஏஐசிபிஐ இன்டெக்ஸ் புள்ளிவிவரங்கள், டிஏ அதிகரிப்பின் முடிவுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது டிஏ உயர்வுக்கான நம்பிக்கையை அதிகரித்துள்ளது. ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களின் ஏசிபிஐ புள்ளிவிவரங்கள் இன்னும் வரவில்லை என்றாலும், ஜூலை-ஆகஸ்ட் காலகட்டத்தில் அகவிலைப்படி உயர்வு 4 சதவிகிதம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை மாற்றியமைக்கப்படுகிறது. முதலாவது ஜனவரி முதல் ஜூன் வரை வழங்கப்படுகிறது, இரண்டாவது ஜூலை முதல் டிசம்பர் வரை வழங்கப்படுகிறது.

1.16 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில், மத்திய அமைச்சரவை மார்ச் 30 அன்று அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரணத்தை (டிஆர்) 3 சதவீதம் அதிகரித்து 34 சதவீதமாக உயர்த்தியது. 

இதற்கான கூடுதல் தவணை ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வரும். 7வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சூத்திரத்தின்படி இந்த அதிகரிப்பு உள்ளது. சமீபத்திய அறிவிப்பின் மூலம், வழக்கமாக ஜூலை மாதம் நிர்ணயிக்கப்படும் அடுத்த டிஏ உயர்வு பற்றிய நம்பிக்கையும் தற்போது சூடு பிடித்துள்ளது. இருப்பினும், ஜூலையில் திட்டமிடப்பட்ட அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படாமல் போகலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | 7th Pay Commission:அகவிலைப்படி அரியர் தொகை பற்றிய பெரிய அப்டேட் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News