Bad Breath Home Remedies: சிலருக்கு வாயிலிருந்து துர்நாற்றம் வரும், இதனால் பிறரிடம் பேசவே தயங்குவார்கள். நன்றாக தானே பல் துலக்குகிறோம், துர்நாற்றம் ஏன் வருகிறது என்று சிலர் எண்ணுவார்கள். ஆனால் நன்றாக பல் துலக்கினாலும் வாய்துர்நாற்றம் வரும். இதற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கின்றனர். வாய் துர்நாற்றம் என்பது பல் துலக்குவதை மட்டுமே தொடர்புடையது அல்ல. உணவுப் பழக்கங்கள் மற்றும் வயிற்றில் பிரச்சனைகளாலும் வாய்நாற்றம் ஏற்படும். இது தவிர ஆல்கஹால் மற்றும் புகைப்பிடித்தல் பழக்கம் இருப்பவர்களுக்கும் இந்த பிரச்னை இருப்பதாக கூறுகின்றனர். நீரிழிவு, கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்னைகளால் வாய் துர்நாற்றம் வருகிறது. வயிற்றில் அல்சர் இருப்பவர்களுக்கு வாய் துர்நாற்றம் வீசும் வாய்ப்புகள் அதிகம் என்று ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த துர்நாற்றத்தை எப்படி சரி செய்யலாம், அதுவும் வீட்டு வைத்தியம் மூலம் எப்படி போக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
மேலும் படிக்க | உடலில் பல அதிசயங்களை செய்யும் பெருஞ்சீரகம் மற்றும் வெந்தய தண்ணீர்
வாய் துர்நாற்றத்தை இயற்கையாகவே குணப்படுத்த 5 வீட்டு வைத்தியம்:
தண்ணீர்
நீரிழப்பு, வாய் வறட்சியை ஏற்படுத்தும் பல காரணிகளில் ஒன்றாகும். தொடர்ந்து தண்ணீர் குடிப்பது வாய் துர்நாற்றத்தைத் தவிர்ப்பதற்கான மிக முக்கியமான வழிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. உங்கள் வாய் ஈரப்பதமாக இருந்தால், அதாவது தண்ணீர் குடிப்பதனால் தேவையற்ற வாசனையை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அகற்ற உதவும். உமிழ்நீர் பல் சுத்தத்தை பராமரிக்க உதவுகிறது மற்றும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் பெருகுவதை தடுக்கிறது.
கிரீன் டீ
கிரீன் டீ உங்கள் வாய் சுகாதாரத்திற்கு பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ளது. ஆய்வுகளின்படி, கிரீன் டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வாய் துர்நாற்றத்திற்கான பல காரணங்களை எதிர்த்துப் போராடுகின்றன. குறிப்பாக, பாலிபினால்கள் கந்தக சேர்மங்கள் மற்றும் துர்நாற்றத்தை உருவாக்கும் நுண்ணுயிரிகளை குறைக்கின்றன.
தயிர்
லாக்டோபாகிலஸ் என்பது தயிரில் காணப்படும் ஒரு நன்மை பயக்கும் பாக்டீரியமாகும். இந்த ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் வயிற்றுக்கு வெளியே உள்ள நோய்க்கிருமி நுண்ணுயிரிகளை விரட்ட உதவும். தயிரில் குறைந்த சர்க்கரை, கொழுப்பு இல்லாததை உறுதி செய்து கொள்ளுங்கள், இது வாய் துர்நாற்றத்தைக் குறைக்கும். சர்க்கரை யோகர்ட்டுக்குப் பதிலாக புரோபயாடிக் தயிர் பயன்படுத்தலாம். இதில் சர்க்கரை குறைவாக இருக்கும். ஏனெனில் சர்க்கரையானது பாக்டீரியாவை இயற்கையாக ஆதரிக்கும், இது வாய் துர்நாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைக்கூடும்.
பெருஞ்சீரகம் விதைகள்
பெருஞ்சீரகம் விதைகள் பாக்டீரியாவுடன் எதிர்த்து போராடும் பண்புகளை கொண்டவை. இது உங்கள் சுவாச திறனை மேம்படுத்தும். இந்த பெருஞ்சீரகம் விதைகள் உமிழ்நீரை அதிகரிக்கிறது, இது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாவை அழிக்க உதவுகிறது.
கிராம்பு
கிராம்பு சுவாசத்தை புத்துணர்ச்சியடையச் செய்கிறது மற்றும் பல் சிதைவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களுடன் எதிர்த்துப் போராட உதவுகிறது. ஒரு சில கிராம்புகளை ஒரு நாளைக்கு அடிக்கடி கடிப்பது உங்கள் சுவாசத்தை உடனடியாக சுத்தப்படுத்தும். கிராம்பு, வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை பெருக்குவதைத் தடுக்கிறது, அதுமட்டுமில்லாமல் படிப்படியாக அதனை நிரந்தரமாக நீக்குகிறது.
மேலும் படிக்க | முடி ஒல்லியா எலிவால் மாதிரி இருக்கா? அப்போ உடனே இத பண்ணுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ