ஜிம்முக்கு போகாமலேயே உடல் எடையை குறைக்கும் 5 எளிய உடற்பயிற்சிகள்

Weight Loss Excercise : நீங்கள் கட்டுமரம் போல் பிட்னஸாக இருக்க, ஜிம்முக்கு போகாமல் வீட்டில் இருந்தபடியே தினமும் 15 நிமிடங்கள் ஒதுக்கி இந்த 5 உடற்பயிற்சிகளை செய்தால் போதும், உடல் எடை வேகமாக குறைந்துவிடும்.

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 7, 2024, 10:27 AM IST
  • உடல் எடையை குறைக்க டிப்ஸ்
  • காலையில் செய்யக்கூடிய உடற்பயிற்சிகள்
  • சீக்கிரமாக உடல் எடை குறையும்
ஜிம்முக்கு போகாமலேயே உடல் எடையை குறைக்கும் 5 எளிய உடற்பயிற்சிகள் title=

தினசரி வாழ்க்கை முறை சிறப்பாக இருந்தால்தான் எல்லோரும் ஆரோக்கியமாக இருக்க முடியும். ஆனால், பிஸியான வாழ்க்கை முறைக்கு மக்கள் மாறிவிட்டதால் ஆரோகியத்துக்காக வெறும் 15 நிமிடங்கள் கூட யாரும் செலவிடுவதில்லை. காலையில் வெறும் 15 நிமிடம் உடற்பயிற்சி செய்வதன் மூலம் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க முடியும். பல நோய்கள் உங்களை தீண்டாது. காலையில் மட்டும் தான் உடற்பயிற்சி செய்ய வேண்டுமா என்றால் அப்படி எல்லாம் எந்த நிபந்தனையும் இல்லை. ஒருவர் எந்த நேரத்திலும் உடற்பயிற்சி செய்யலாம், ஆனால் காலையில் உடற்பயிற்சி செய்தால் மட்டுமே நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும். 

காலையில் செய்யக்கூடிய 5 உடற்பயிற்சிகள் : 

ஜாகிங்- காலையில் ஜாகிங் செய்வது உடலுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஜாகிங் தசைகளை வலுப்படுத்துகிறது. எலும்புகளை பலப்படுத்துகிறது. வெறும் 15 நிமிட ஜாகிங் உங்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். நாள் முழுவதும் நீங்கள் சுறுசுறுப்பாக உணருவீர்கள். காலையில் ஜாகிங் செய்யும்போது, எடையை சீக்கிரம் குறைக்கலாம்.

மேலும் படிக்க | இந்தியாவின் பணக்கார விநாயகர் : அம்பானி குடும்பம் கொடுத்த 20 கிலோ தங்கம் கிரீடம்

ஸ்கிப்பிங்- காலையில் வேறு எந்த உடற்பயிற்சிக்கும் நேரம் இல்லை என்றால், நீங்கள் 15 நிமிடங்களுக்கு கயிற்றைக் கொண்டு ஸ்கிப்பிங் செய்யலாம். இந்த 15 நிமிட குதித்தல் கார்டியோ பயிற்சிகள் உங்களுக்கு நிறைய ஆற்றலைத் தருவதோடு, உங்களைப் பிட்னஸாக வைத்திருக்க உதவும். ஸ்கிப்பிங் ரோப் என்பது நீங்கள் எந்த நேரத்திலும் செய்யக்கூடிய ஒரு நல்ல பயிற்சியாகும். இதனால் உடலின் சமநிலை மேம்படும்.

புஷ்-அப்கள்- உங்களால் வேறு எந்த உடற்பயிற்சியும் செய்ய முடியாவிட்டால், தினமும் காலையில் வார்ம் அப் செய்து, பிறகு 10-15 நிமிடங்கள் புஷ்-அப் செய்யுங்கள். இது உங்கள் கைகள் மற்றும் தோள்களின் தசைகளை வலுவாக்குவதோடு, அழகியலையும் மேம்படுத்தும். இந்த பயிற்சி செய்வதன் மூலம் வயிற்றில் சேரும் அதிகப்படியான கொழுப்பு குறைந்து, எடையும் குறைய ஆரம்பிக்கும்.

ஜம்பிங் ஜாக் - இந்த பயிற்சி மிகவும் எளிதானது. காலையில் ஜம்பிங் ஜாக் செய்வது சுறுசுறுப்பை கூட்டும். வீட்டிற்குள் மிகச் சிறிய இடத்தில் ஜம்பிங் ஜாக்ஸ் உடற்பயிற்சி செய்யலாம். இது எலும்புகள் மற்றும் தசைகளை பலப்படுத்துகிறது. இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனால் சோம்பல் நீங்கி உடல் எடையும் குறைக்கும்.

Squats- தினமும் காலையில் Squats செய்வது உங்கள் உடலுக்கு முழு ஆற்றலைக் கொடுக்கும். Squats என்பது உங்கள் அடிவயிறு எடையைக் குறைக்க உதவும் ஒரு பயிற்சியாகும். ஸ்குவாட் செய்வதன் மூலம் கலோரிகள் மிக வேகமாக எரிக்கப்படுகின்றன. ஜிம் இல்லாமல் வீட்டிற்குள் செய்ய இது ஒரு சிறந்த பயிற்சி.

மேலும் படிக்க | சனிபகவானும் ஷஷ ராஜயோகமும்... இந்த ராசிகளை 2025 மார்ச் வரை பிடிக்கவே முடியாது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News