மாசச்சூசெட்ஸில் 103 வயது மூதாட்டி கொரோனா வைரஸை தோற்கடித்த வெற்றியை, குளிர்ந்த பீருடன் கொண்டாடுகிறார்...
மூன்று வாரங்களுக்கு முன்பு, மாசச்சூசெட்ஸில் உள்ள தனது மருத்துவ மனையில் கொரோனா வைரஸ் பாஸிடிவ் என்று கண்டறியப்பட்ட முதல் நபர் ஜென்னி ஸ்டெஜ்னா ஆவார். 103 வயதான தனது பாட்டி எப்போதும் உற்சாகமானவர் என்கிறார் ஷெல்லி கன்.
மாசசூசெட்ஸ் பெண்ணின் அன்புக்குரிய இந்த 103 வட்யது பாட்டி ஜென்னி ஸ்டெஜ்னா, இந்த மாத தொடக்கத்தில்மரணத்தின் விளிம்பிலிருந்து திரும்பி வந்தது அனைவருக்கும் மகிழ்சியையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. கோவிட் -19 பெருந்தொற்றால் அமெரிக்கர்கள் மிகவும் பாதிக்கப்ப்ட்டிருக்கின்றனர். இந்த நிலையில் நூறு வயதை தாண்டிய ஒருவர், கொரோனாவின் கொடூர தாக்குதலை முறியடித்திருகிறார் என்பது கொரோனாவை பற்றிய பீதிக்கு மத்தியில் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.
அண்மையில் வாஷிங்டன் மாநிலத்தில் இருந்து ஈஸ்டனுக்கு திரும்பிச் சென்றிருக்கிறார். செஹ்ல்லி கன், தி எண்டர்பிரைஸ் ஆஃப் ப்ரோக்டன் என்ற பத்திரிகையிடம் பேசிய அவர்,"என் பாட்டி எப்போதுமே போராட்ட குணம் கொண்டவர். உற்சாகமானவர், எதையும் அவ்வலவு சீக்கிரம் விட்டுக் கொடுத்துவிடமாட்டார்" என்று தெரிவித்தார்.
மூன்று வாரங்களுக்கு முன்பு, Life Care Center of Wilbraham என்ற தனது நர்சிங் ஹோமில் செய்யப்பட்ட பரிசோதனையில் ஸ்டெஜ்னாவுக்கு கொரோனாவின் தாக்கம் இருந்தது தெரியவந்தது. அங்கு இதுவரை செய்யப்பட்ட அனைத்து கொரோனா பரிசோதனைகளிலும் இவருக்குதான் முதலில் பாஸிடிவ் என்று முடிவு வெளியானது.
அதையடுத்து அனைவரும் மிகவும் வருத்தமடைந்தனர். ஸ்டெஜ்னாவின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், அவர் ஷெல்லி கன், அவரது கணவர் ஆடம் மற்றும் 4 வயது மகள் வயலட் ஆகியோரிடம் பேசினார். இறுதி விடைபெறும் சந்திப்பாக இருக்கும் என்ற நினைப்பே அனைவரிடமும் இருந்தது. ஸ்டெஜ்னா, தங்களுக்கு செய்த அனைத்திற்காகவும், ஷெல்லி கன் நன்றி தெரிவித்தார்
சொர்க்கம் செல்லத் தயாரா என்று ஆடம் கன் கேட்டபோது, "ஹெல், யெஸ்" என்று பதிலளித்தார் ஸ்டெஜ்னா. ஆனால், மே 13 அன்று, ஸ்டெஜ்னா குணமடைந்துவிட்டார் என்ற செய்தி கன்னுக்கு கிடைத்தது. "நாங்கள் உண்மையிலேயே மிகவும் நன்றி கடமைப்பட்டிருக்கிறோம்" என்று கன் கூறினார்.
பாட்டி குணமடைந்ததைக் கொண்டாட விரும்பினார்கள். தனது மறுவாழ்வை கொண்டாட விரும்பிய ஸ்டெஜ்னா ஒரு ஐஸ் பீரை அனுபவித்து குடித்தார், அவர் விரும்பிய இந்த ஐஸ் கோல்ட் பீரை அவர் நீண்ட காலமாக தவிர்த்து வந்ததாக ஷெல்லி கன் கூறினார்.
ஸ்டெஜ்னாவுக்கு, இரண்டு குழந்தைகள், மூன்று பேரக்குழந்தைகள், நான்கு கொள்ளுப் பேரக்குழந்தைகள் மற்றும் மூன்று எள்ளுப் பேரப்பிள்ளைகள் உள்ளனர்.
- (மொழியாக்கம்) மாலதி தமிழ்ச்செல்வன்.