பவானி-யின் குறுக்கே 3-வது அணையினை கட்ட கேரளா அரசு முடிவு!

காவிரி ஆற்றின் முக்கிய துணை ஆறுகளில் ஒன்றான பவானி ஆற்றின் குறுக்கே 3 தடுப்பணைகளை கட்ட கேரளா அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

Last Updated : Apr 28, 2018, 01:32 PM IST
பவானி-யின் குறுக்கே 3-வது அணையினை கட்ட கேரளா அரசு முடிவு! title=

காவிரி ஆற்றின் முக்கிய துணை ஆறுகளில் ஒன்றான பவானி ஆற்றின் குறுக்கே 3 தடுப்பணைகளை கட்ட கேரளா அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

தமிழகத்தின் நீலகிரி மலைத்தொடரில் உள்ள குந்தா மலைப்பகுதியில் தோன்றி மேற்கு நோக்கி கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்திலுள்ள அட்டப்பட்டி பள்ளத்தாக்கில் பாய்ந்து அங்குள்ள முக்கலி என்னுமிடத்தில் 120 பாகை திரும்பி கிழக்கு நோக்கி நீலகிரி மாவட்டத்தில் பாய்ந்து மீண்டும் தமிழகத்துக்குள் வருகிறது இந்த பவானி ஆறு.

இந்நிலையில் அட்டப்பட்டி உள்பட தெக்குவாட்டி, பாட்டவயல், சவடியூர், மன்சுகாண்டி, கூடப்பட்டு மற்றும் ரங்கநாதபுறம் என 7 இடங்களில் தடுப்பணைகளை கட்ட கேரளா பணிகளை துவங்கியுள்ளது.

தடுப்பணைகள் என்பது தற்காலிக அணை என கூறப்பட்டாலும், தமிழம மக்களுக்கு தேவையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுவரும் தற்போதைய நிலையில் இந்த தடுப்பணைகள் மேலும் பிரச்சணையாக அமையும் என எதிர்பார்க்கப்டுகிறது.

முன்னதாக கடந்த ஆண்டு தெக்குவாட்டி, மன்சுகாண்டி ஆகிய இரண்டு தடுப்பணைகள் ஏற்கனவே கட்டப்பட்டுவிட்ட நிலையில், தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு விட்டால் பின்னர் மீதமுள்ள தடுப்பணைகளை கட்ட முடியாது என்பதாலும் இந்த தடுப்பணைகளை விரைவாக கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

Trending News