கனமழையால் அணைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி 2 நாட்களுக்கு அவலாஞ்சி சுற்றுச்சூழல் மையம் மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
தமிழர்களின் உரிமையை பறிக்கும் வகையில் மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்கியது தவறு என்றும் , சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றாத தமிழக அரசைக் கண்டித்து போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என விவசாயக்குழு சங்கங்களின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.
காவிரி நதிநீர் விவகாரத்தில் தண்ணீரை கொடுக்க கூடாது என்பது கர்நாடக அரசியல் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார்.
பவானிசாகர் அணை கட்டி 67 ஆண்டுகள் முடிவடைந்து 68-வது ஆண்டில் அடி எடுத்து வைத்து, கம்பீரமாக காட்சி அளிக்கிறது. இந்நேரத்தில் பவானிசாகர் அணையின் சிறப்பம்சங்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
சீனா உலகின் மிகப்பெரிய நீர்மின் அணை கட்டு ஒன்றை திட்டமிட்டு வருகிறது. ஆனால், உலகின் மிகப்பெரிய அணைகட்டு கட்டும் சீனாவின் கனவு தகர்ந்து விடும் நிலையில் உள்ளது.
400 ஆண்டுகளில் இங்கிலாந்தின் எக்ஸ்மூர் (Exmoor) பகுதியில் நீர் எலிகள் (beavers) முதல் அணையை உருவாக்கியிருக்கின்றன. 400 ஆண்டுகளில் முதல் முறையாக, இங்கிலாந்தின் எக்ஸ்மூரில் நீரெலிகள் ஒரு அணையை கட்டமைத்து, சாதனை புரிந்துள்ளன. நீரெலி என்பது நீரிலும், நிலத்திலும் வாழும் விலங்கினம் ஆகும்.
பாலாற்றின் குறுக்கே மேலும் 30 தடுப்பணைகள் கட்ட ஆந்திர அரசு தொடர்ந்து முயற்ச்சி செய்து வருவதை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்.
கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைக் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகியும், அதற்கான அடிப்படைப் பணிகள் தொடங்கப்படாமல் அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்!
மணிமுத்தாறு அணையின் பெருங்கால் பாசனத்தின் கீழுள்ள நேரடி மற்றும் மறைமுக பாசனத்திற்கு மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.