முதலில் உங்கள் நாட்டை திருத்துங்கள் அஃபிரிடி-க்கு ஷிகர் தவான் பதிலடி

காஷ்மீர் குறித்து சர்ச்சைக்குறிய கருத்து கூறிய சாகித் அஃபிரிடிக்கு இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகார் தவான் பதிலடி கொடுத்துள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 5, 2018, 05:15 PM IST
முதலில் உங்கள் நாட்டை திருத்துங்கள் அஃபிரிடி-க்கு ஷிகர் தவான் பதிலடி title=

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாகித் அஃபிரிடி காஷ்மீர் குறித்து சர்ச்சைக்குறிய கருத்து கூறியதால், விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளார். இந்த பிரச்சினை குறித்து ஷாஹித் அப்ரிடிக்கு முதலில் கவுதம் கம்பீர் பதிலளித்தார். பின்னர், சச்சின் டெண்டுல்கர், கபில்தேவ் மற்றும் விராத் கோலி ஆகியோர் அவர்களுக்கான ஸ்டைலில் பதில் அளித்தனர். தற்போது கப்பர் என செல்லமாக அழைக்கப்படும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகார் தவான் மிகவும் தீவிரமாக சாகித் அஃபிரிடி சாடியுள்ளார். 

சாகித் அஃபிரிடி-ன் சர்ச்சை டிவிட் ‘இந்திய ஆக்ரமிப்பு காஷ்மீர்’

சாகித் அஃபிரிடி தனது ட்விட்டரில், “இந்திய ஆக்ரமிப்பு காஷ்மீர் சூழ்நிலை அச்சுறுத்துவதாகவும் கவலையளிப்பதாகவும் உள்ளது. அடக்குமுறை ஆட்சியினால் காஷ்மீர் சுய நிர்ணய உரிமை, விடுதலைக் குரல்களை ஒடுக்க காஷ்மீரில் அப்பாவிகள் பலியாகின்றனர். எங்கே சென்றது ஐ.நா மற்றும் பிற சர்வதேச அமைப்புகள், இவர்கள் ஏன் இந்த ரத்தம் சிந்துதலை தடுக்க முயற்சிகள் எடுக்கவில்லை?” என்று ட்வீட் செய்துள்ளார். 

 

 

அதற்க்கு பதிலடியாக ஷிகார் தவான் கூறியதாவது:- 

அஃப்ரிடி தனது நாட்டுக்காக கவலைப்பட வேண்டும். முதலில் அவர் நாட்டை திருத்த வேண்டும். எங்கள் நாட்டை பற்றி கவலைப்பட வேண்டாம். உங்கள் யோசனையை உங்களிடம் வைத்துக் கொள்ளுங்கள். எங்கள் நாட்டுக்காக நாங்கள் என்ன செய்கிறோமோ அது நன்றாகவும், அடுத்து என்ன செய்ய வேண்டுமோ அது நல்லாவே தெரியும். எனவே தேவை இல்லா விசியத்தில் மூளையை உபயோக்க வேண்டாம் ஷாகித் அப்ரீடி என ஷிகார் தவான் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

 

 

முன்னதாக, கவுதம் கம்பீர் தனது பாணியில் அஃப்ரிடி பதில் கொடுத்தார். அவர் கூறியது:-

"ஷாஹித் அஃப்ரிடியின் கருத்து பற்றி என்னிடம் கேட்கிறார்கள். அவரையும், அவரது கருத்தையும் கண்டு கொள்ளாதீர்கள். அவர் ஐநா-வை தேடுகிறார். அவரது குறைபாடுள்ள அகராதியில் UN என்பதற்கு 'அன்டர் நைன்டீன்' என்று பொருள் என்றும், அது அஃப்ரிடியின் வயதைக் குறிப்பதாகவும் அவர் நினைக்கிறார். நோ பாலில் அவுட் செய்துவிட்டு கொண்டாட்டத்தில் உள்ளார் என்றும் கவுதம் கம்பீர் தமது ட்வீட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

 

 

அதேபோல, மாஸ்டர் பிளேஸ்டர் சச்சின் டெண்டுல்கர், எங்கள் நாட்டை காத்துக்கொள்ள எங்களிடம் திறமையானவர்கள் இருக்கிறார்கள். இதைப்பற்றி ஒரு வெளிநாட்டவர் சொல்ல வேண்டிய அவசியமில்லை. நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரியும் எனக் கூறியிருந்தார். 

IPL என்னும் மாய உலகத்திற்கு நம்மை அடிமைப்படுத்த வேண்டாம்- இயக்குநர் பாரதிராஜா

நாட்டுக்கு முதல் கிரிக்கெட் உலகக்கோப்பை பெற்று தந்த முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ் கூறியது, அஃப்ரிடி யார்? ஏன் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்? முதலில் அவர்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது எனக் கூறியிருந்தார்.

Trending News