#CauveryIssue: தமிழகத்தில் கர்நாடக அரசு பேருந்துகள் நுழைய தடை!!

தமிழகத்தில் காவிரி விவகாரத்தில் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழக எல்லையில் கர்நாடக அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டு உள்ளன.

Last Updated : Apr 11, 2018, 11:39 AM IST
#CauveryIssue: தமிழகத்தில் கர்நாடக அரசு பேருந்துகள் நுழைய தடை!! title=

தமிழகத்தில் காவிரி விவகாரத்தில் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழக எல்லையில் கர்நாடக அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டு உள்ளன.

கடந்த மாதம் 16-ம் தேதி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான இறுதி தீர்ப்பில் உச்ச நீதிமன்றம், மார்ச் 29-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதா மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த 1-ம் தேதி முதல் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், மவுன போராட்டம் சாலை, ரயில் மறியல் என தொடர் போராட்டங்களை அரசியல் கட்சிகள், விவசாயா அமைப்புக்கள், இயங்கங்கள், மாணவர்கள், இளைஞர்கள், வணிகர்கள், பெண்கள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் கடையடைப்பு போராட்டம், மவுன அறவழி போராட்டம் என நாளுக்கு நாள் போராட்டங்கள் வருத்து வருகின்றன. இதனால் தமிழகமே போராட்டக்களமாக மாறியுள்ளது.

இதை யடுத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராகவும் சென்னையில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. இதில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பல மணி நேரம் சென்னையின் பல பகுதிகளில் பதற்றம் நிலவியது.

இந்நிலையில், தமிழகத்தில் காவிரி விவகாரத்தில் போராட்டம் வலுத்து வரும் நிலையில் கர்நாடக அரசு பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டு உள்ளன.

சத்தியமங்கலம் வழியாக கோவை, ஈரோடு செல்லும் கர்நாடக பதிவெண் கொண்ட பேருந்துகள் திம்பம் சோதனைச் சாவடியில் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டன. அவை பாதுகாப்பு நலன் கருதி புளிஞ்சூர் சோதனை சாவடி வழியாக போலீஸாரால் திருப்பி அனுப்பப்படுகின்றன.

எந்தவித பிரச்சினையும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற பாதுகாப்பு காரணங்களுக்காக போலீஸார் கருதியே வாகனங்களை தடுத்து நிறுத்தியதாகவும், அதனால் புளிஞ்சூர் சோதனைசாவடி வழியாக கர்நாடக பேருந்துகள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. எல்லையோர பகுதியில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

Trending News