#Karnataka: சூடுபிடிக்கும் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம்! மோடி-சோனியா பங்கேற்பு!!

கர்நாடாக தேர்தல் பிரசாரம் 10-ம் தேதியுடன் முடிவதால் இறுதிக்கட்ட சூறாவளி பிரசாரத்தில் பிரதமர் மோடி, சோனியா, ராகுல் மற்றும் பாஜ தலைவர் அமித் ஷா ஆகியோர் ஈடுபடள்ளனர்!

Last Updated : May 10, 2018, 12:01 PM IST
#Karnataka: சூடுபிடிக்கும் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம்! மோடி-சோனியா பங்கேற்பு!! title=

224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் 12 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால், அனல் பறக்கும் பிரசாரத்தால், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது!

கார்நாடக மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் வரும் மே 12-ஆம் நாள் நடைப்பெறவுள்ள நிலையில், பிரதமர் மோடியும், காங். தலைவர் ராகுலும் ஏற்கனவே தங்கள் பிரசாரத்தை துவக்கி விட்டனர். இருவரும் அனல் பறக்கும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். 

இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில், கர்நாடகவுக்கான தேர்தல் அறிக்கையை இரண்டு கட்சிகளும் வெளியிட்டுள்ளார்கள். நாளையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிடைகிறது.

அதை தொடர்ந்து, கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு பங்காரப்பேட்டையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மோடி பேசியபோது...!

ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரஸ் தோல்வியை தழுவி வருகிறது. இதனை உத்தரகண்டிலும், உத்தர பிரதேசத்திலும் பார்த்துள்ளோம் கர்நாடகாவை விட்டு வெளியேறும் நேரமும் அக்கட்சிக்கு வந்துவிட்டது. மாநிலத்தில் காங்கிரசை வழியனுப்ப மக்கள் தயாராக உள்ளனர் அக்கட்சியின் உண்மை முகத்தை மக்கள் தெரிந்து கொண்டுள்ளர் இதனால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

அடுத்த 5 ஆண்டுகளில் மாநிலத்திற்கு என்ன தேவை என்பதை நிர்ணயிக்கும் தேர்தல் இது. பல மாநிலங்களை காங்கிரஸ் சீரழித்து வந்தது, கலாசாரம், வகுப்புவாதம், சாதி, குற்றம், ஊழல், ஒப்பந்ததாரர் முறை ஆகிய 6 நோய்களால் காங்கிரஸ் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

அதே போன்று சோனியா காந்தி பேசுகையில்...!

பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வால் ஏழை எளியோரும், பெண்களும், நடுத்தர வர்க்கத்தினரும் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். ஆனால், மோடி மக்களை பற்றி கவலை கொள்ளாமல் நடிகரைப் போல பாவனை காட்டி பேசுகிறார். அவரின் இந்த பேச்சால் பசியில் துடிக்கும் ஏழைகளின் வயிறு நிரம்பி விடாது. பேசியதை செயல்படுத்தாமல் வெளிநாடுகளுக்கு போய்க் கொண்டிருக்கிறார் என்றார். 
 
இந்த நிலையில்,தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருக்கும் அமைச்சர்கள்., எம்.எல்.ஏக்கள்  என பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கர்நாடகாவில் குவிந்துள்ளனர். இதனால் பெங்களூரு மாநகரம் அரசியல் புள்ளிகளின் வருகையால் திணறி கிடக்கிறது. நாளை மாலையுடன் பிரசாரம் முடிவதால் இறுதிக்கட்ட சூறாவளி பிரசாரத்தில் பிரதமர் மோடி, சோனியா, ராகுல் மற்றும் பாஜ தலைவர் அமித் ஷா  ஆகியோர் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News