224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலில், 222 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றதில், அதிகபட்சமாக பாஜகவுக்கு 104 இடங்கள் கிடைத்தன. காங்கிரசுக்கு 78 இடங்களும், மஜதவுக்கு 37 இடங்களும் கிடைத்தன.
தேர்தலுக்கு பிறகு 78 இடங்களில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மஜத உடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது. ஆனால் தனிப்பட்ட முறையில் அதிக இடங்களை கைப்பற்றிய பாஜக-வை ஆட்சி அமைக்க வருமாறு கர்நாடகா ஆளுநர் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று கர்நாடகத்தின் புதிய முதல்வராக பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பா நேற்று பதவி ஏற்றார். சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் வழங்கி இருக்கிறார்.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரனைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் நாளை 4 மணிக்கு நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தி எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். எம்எல்ஏக்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஓட்டெடுப்பு வெளிப்படையாக நடத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பேரம் பேசி பாஜக இழுப்பதை தடுக்க அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டு ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் சென்றடைந்தனர். அவர்களை இன்று சித்தராமையா சந்தித்து பேசினார். நாளை நம்பிக்கை ஓட்டெடுப்பு நடைபெறுவதால், ஐதராபாத்தில் நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டு உள்ள எம்.எல்.ஏ.க்களை ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்வதற்காக பெங்களூரு திரும்பி உள்ளனர்.
Congress MLAs leave from Hotel Taj Krishna in Hyderabad. They will be travelling to Bengaluru. #KarnatakaElections2018 pic.twitter.com/T9ZTJAhyV7
— ANI (@ANI) May 18, 2018