வரும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பதாமி தொகுதியில் போட்டியிடுவதற்காக கர்நாடக முதல்வர் சித்தராமையா அவர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்!
கார்நாடக மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் வரும் மே 12-ஆம் நாள் நடைப்பெறவுள்ள நிலையில், நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி காண அனைத்து கட்சிகளும் பல யுக்திகளை கையாண்டு வருகிறது.
ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முதல்வர் தலமையிலான காங்கிரஸ் கட்சியும், அவர்களிடன் இருந்து ஆட்சியை கைப்பற்ற பாஜக-வும் பனிப்போர் நடத்தி வருகின்றன. அதே வேலையில் தேர்தலில் வெற்றிப் பெற அறிவிக்கப்பட இருக்கும் வேட்பாளர்களும் தங்கள் தரப்பிற்கு மக்கள் மனதில் இடம்பிடிக்க பல விஷயங்களை செய்து வருகின்றனர்.
முன்னதாக, மைசூரு மாவட்டத்தின் சாமுண்டீஸ்வரி தொகுதியில் கர்நாடக முதல்வர் சித்தராமையா அவர்கள் கடந்த ஏப்ரல் 20-ஆம் நாள் வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்... வட கர்நார்டாக பகுதியில் இருக்கும் பாதாமி தொகுதி மக்கள் தன்னை அத்தொகுயில் போட்டியிடமாறு கோருவதாகவும், தலைமை அனுமதித்தால் போட்டியிடுவேன் எனவும் தெரிவித்து இருந்தார்.
பின்னர் பாதமி தொகுதியிலும் அவர் போட்டியிடுவதை உறுதிப்படுத்தினார். இந்நிலையில் இன்று அவர் பதாமி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக இன்று அவரை எதிர்த்து பதாமி தொகுதியில் போட்டியிட பாஜக சார்பில் B.ஸ்ரீராமலு வேட்புமனு தாக்கல் செய்தார்.
Karnataka CM Siddaramaiah filed nomination from Badami for #KarnatakaElections2018 pic.twitter.com/p1Q4pgFrp5
— ANI (@ANI) April 24, 2018