ஜிசாட்-11 செயற்கைக்கோள் ஏவலை தள்ளிவைப்பு: இஸ்ரோ தகவல்!!

வரும் மே 25ஆம் தேதியன்று ஏவப்படுவதாக இருந்த ஜிசாட்-11 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் தேதி ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது!

Last Updated : Apr 26, 2018, 10:37 AM IST
ஜிசாட்-11 செயற்கைக்கோள் ஏவலை தள்ளிவைப்பு: இஸ்ரோ தகவல்!! title=

இஸ்ரோ சார்பில் தகவல் தொடர்பு செயற்கைகோள் ஜிசாட் - 6ஏ விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்ட பின் அதன் தொடர்பை இழந்தது.

இந்த நிலையில், இஸ்ரோ சார்பில் தகவல் தொடர்புக்கான அதிக எடை கொண்ட ஜிசாட் - 11 நவீன செயற்கைகோள் தயாரிக்கப்பட்டது. 

அந்த செயற்கைகோளை அடுத்த மாதம்-மே பிரெஞ்ச் கயானாவில் இருந்து விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டது. 

ஆனால், இஸ்ரோ நிறுவனம் தற்போது அந்த செயற்கைகோளை விண்ணில் செலுத்துவதை ஒத்திவைத்துள்ளது. 

இதுகுறித்து இஸ்ரோ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்...!

தொழில்நுட்ப ரீதியிலான சோதனைகள் நடத்த வேண்டி இருப்பதால் அந்த செயற்கைகோளை விண்ணில் ஏவுவது ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. 

அந்த செயற்கைகோளை விண்ணில் ஏவுவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றது. 

Trending News