IPL_2018: அசத்துவதற்கு களமிறங்கியது ஹைதராபாத் அணி பேட்டிங்!

வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்புடன் ஐதராபாத் அணி பேட்டிங் செய்துவருகிறது! 

Last Updated : Apr 24, 2018, 08:20 PM IST
IPL_2018: அசத்துவதற்கு களமிறங்கியது ஹைதராபாத் அணி பேட்டிங்! title=

மும்பை: ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரில், 5 ஆட்டங்களில் நான்கு தோல்விகளை சந்தித்துள்ள மும்பை அணி, ஹைதராபாத் அணிக்கு எதிராக இன்று நடக்கும் ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்புடன் உள்ள ஐதராபாத் பேட்டிங் செய்கிறது. ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரின் 11-வது சீசன் போட்டிகள் நடந்து வருகின்றன. 

இதுவரை 22 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில், பஞ்சாப் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சி.எஸ்.கே இரண்டாவது இடத்தில் உள்ளது. போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளும் தலா 14 ஆட்டங்களில் விளையாட உள்ளன. கிட்டத்தட்ட பெரும்பாலான அணிகள் தலா 6 ஆட்டங்களை முடித்துள்ளன. மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் தங்களுடைய ஆறாவது ஆட்டத்தில் விளையாடுகின்றன. 

மும்பை வாங்கடே மைதானத்தில் நடக்கும் ஆட்டத்தில் டாஸை வென்ற மும்பை அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்புடன் ஐதராபாத் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது. 

Trending News