IPL 2018: ஜோஸ் பட்லர் அதிரடியால் ராஜஸ்தான் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : May 9, 2018, 06:01 AM IST
IPL 2018: ஜோஸ் பட்லர் அதிரடியால் ராஜஸ்தான் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி title=

தற்போது ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11-வது சீசன் நடந்து வருகிறது. நேற்று இரவு 8 மணியளவில் நடைபெற்ற 40_வது லீக் ஆட்டத்தில் மூன்றாவது இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணியும், கடைசி இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் மோதின. இதில் டாஸ் வென்ற வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. 

தொடக்க வீரர்களாக ராஜஸ்தான் கேப்டன் அஜிங்கியா ரஹானே மற்றும் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் களம் இறங்கினர். ரஹானே 9 ரன்களில் அவுட் ஆகா, மறுமுனையில் ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடிய அரைசதத்தை கடந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 82(58) ரன்கள் எடுத்தார். அதில் 9 பவுண்டரி மற்றும் 1 சிச்சர் அடங்கும். பஞ்சாப் வீரர் ஆண்ட்ரூ டை 4 விக்கெட் கைப்பற்றினார்.

 

159 வெற்றிக்கு தேவை என்ற நிலையில் களம் இறங்கிய பஞ்சாப் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ராஜஸ்தான் வீரர் கவுதம் வீசிய 2_வது ஓவரில் கிறிஸ் கெய்ல் ஸ்டெம்பிங் அவுட் ஆனார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ் கெய்ல் ஒரு ரன்னில் அவுட் ஆனது பெரும் ஏமாற்றத்தை தந்தது ரசிகர்களுக்கு, பின்னர் வந்த பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் டக்-அவுட் ஆனார். ஒரே ஓவரில் இரண்டு விக்கெட் இழந்து தடுமாறிய பஞ்சாப் அணிக்கு மூன்றாவது ஓவரிலும் மேலும் ஒரு விக்கெட்டை இழந்தது. கருண் நாயர் 3 ரன்களில் அவுட் ஆனார். 19 ரன்களுக்கு மூன்று விக்கெட் இழந்து தடுமாறியது. ஆனால் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் அதிரடியா விளையாடி வந்தார். மறுமுனையில் மற்ற வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனதால், பஞ்சாப் அணி 20 ஓவரில் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ஜோஸ் பட்லர் தேர்ந்தேடுக்கப்பட்டார். இந்த ஐபிஎல் தொடரில் நான்காவது வெற்றியை பெற்றுள்ளது ராஜஸ்தான் அணி. இதன்மூலம் புள்ளி பட்டியலில் அந்த அணி 6_வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. அதேவேளையில் பஞ்சாப் அணி 12 புள்ளிகளை பெற்று 3_வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் 41 லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் மோத உள்ளன.

 

 

Trending News