நடந்து களைத்துப் போகும் அளவுக்கு நீளமான ரயில் நடைமேடை உலகில் உள்ளது. முக்கியமாக, இந்த ரயில் நடைமேடை இந்தியாவில் அமைந்துள்ளது என்பது ஆச்சரியமான விஷயம். உலகின் நீளமான ரயில்வே பிளாட்ஃபார்ம் எங்குள்ளது என்பதும், அதில் நடந்தால் சோர்வு தான் மிஞ்சும் என்பதும் இந்தியாவின் அதிசயங்கள். நம் நாட்டில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். அதனால்தான் இந்திய இரயில்வே நாட்டின் வாழ்க்கை பாதை என்று அழைக்கப்படுகிறது.
ஏனெனில் இந்திய இரயில்வே நாட்டின் ஒவ்வொரு மூலையையும் ஒன்றோடொன்று இணைக்கிறது. இந்தியாவின் ரயில்வே நெட்வொர்க் உலகின் இரண்டாவது பெரிய ரயில்வே நெட்வொர்க் ஆகும். அதேபோல, உலகின் மிகப்பெரிய ரயில்வே பிளாட்பாரமும் இந்தியாவிலேயே அமைந்துள்ளது.
உலகிலேயே மிகப்பெரிய ரயில் நடைமேடை, உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள கோரக்பூர் சந்திப்பு ரயில் நிலையம் ஆகும். கோரக்பூர் ரயில் நிலையத்தில், பிளாட்ஃபார்ம் 1 மற்றும் பிளாட்ஃபார்ம் எண். 2 ஆகியவை உலகின் மிக நீளமான நடைமேடைகளாகும்.
மேலும் படிக்க | Sugarcane Juice: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கறும்புச்சாறு ஜூஸ்
இதன் நீளம் 1364 மீட்டர். இந்த பிளாட்பாரம் ஒன்றரை கிலோமீட்டர் நீளம் கொண்டது. இந்த பிளாட்பாரத்தில் நடக்க முயன்றால் களைத்துப் போய்விடும். அதன் ஒரு பக்கத்திலிருந்து மறுபுறம் நடந்தால், நடக்கும்போது கண்டிப்பாக சோர்வடையும். உங்கள் கால்களில் வலி ஏற்படலாம்.
கோரக்பூர் சந்திப்பு இந்திய ரயில்வேயின் வடகிழக்கு ரயில்வே கோட்டத்தின் கீழ் வருகிறது. உலகின் மிக நீளமான பிளாட்பார்ம் என்பதால், இந்த சந்திப்பு லிம்கா புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2013 அக்டோபரில் பிளாட்பார புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பிறகு இது உலகின் மிக நீளமான தளமாக மாறியது.
கோரக்பூர் சந்திப்பு வழியாக தினமும் 170 அல்லது அதற்கு மேற்பட்ட ரயில்கள் செல்கின்றன. இந்த ரயில் நிலைய நடைமேடை 1 மற்றும் 2 மிகவும் நீளமானது, ஒரே நேரத்தில் 26 பெட்டிகள் கொண்ட இரண்டு ரயில்களை இங்கு நிறுத்த முடியும்.
மேலும் படிக்க | மேகாலயா தேர்தல் முடிவுகள் 2023: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது! சிம்மாசனம் யாருக்கு?
இந்த வகையில் உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் ரயில் நிலையத்தில் உலகின் மிக நீளமான நடைமேடை உள்ளது. முன்னதாக இந்த சாதனை கரக்பூர் ஸ்டேஷன் பெயரில் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய ரயில்வே
உலகின் மிகப்பெரிய ரயில் சந்திப்பு அதாவது ஜங்ஷன் என்பதிலும் இந்தியாவின் பெய முதலில் வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா ரயில் நிலைய சந்திப்பு உலகிலேயே மிகப் பெரிய ரயில்வே ஜங்ஷன் ஆகும். ஒரு ரயில் நிலையம் வழியாக குறைந்தது 3 வழித்தடங்கள் செல்லும் நிலையங்கள் ரயில் சந்திப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.
மேலும் படிக்க | உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம்! ஒரே நேரத்தில் 40+ ரயில்கள் நிற்கலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ