திருமணத்திற்கு மறுத்ததால் தீ-க்கு இரையான பெண்!

ராஜஸ்தான் மாநிலத்தில் திருமணம் செய்துகொள்ள மறுத்த 18-வயது பெண் ஒருவரை அவரது சொந்த தந்தையே தீ-க்கு இரையாக்கி உள்ளார்.

Last Updated : Sep 25, 2017, 04:15 PM IST
திருமணத்திற்கு மறுத்ததால் தீ-க்கு இரையான பெண்! title=

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் திருமணம் செய்துகொள்ள மறுத்த 18-வயது பெண் ஒருவரை அவரது சொந்த தந்தையே தீ-க்கு இரையாக்கி உள்ளார்.

ராஜஸ்தான், பன்ஸ்வாரா மாவட்டம் ஈஸ்வர்ல பகுதியில் இந்த கொடூரச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் சீமா-வினை அவரது வீட்டார் திருமணம் செய்துகொள்ளுமாறு கட்டாயப் படுத்தியுள்ளனர். இதற்கு அவர் ஒப்புக்கொள்ள மறுத்ததால் அவரது சொந்த தந்தையே அவரை தீ வைத்து கொலை செய்ய முயற்சித்துள்ளார்

இதனையடுத்து அவர் பான்ஸாராவில் உள்ள எம்.ஜி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட 75% உடற்பகுதி எரிந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது மோசமான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News