காஷ்மீரில் கிடைத்த லிதியம் புதையல் இந்தியாவின் தலைவிதியை மாற்றுமா..!

லித்தியம் உலகம் முழுவதும் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டு வரும் நிலையில்,  இது 21 ஆம் நூற்றாண்டின் பெட்ரோல் என்றும் அழைக்கப்படுகிறது. இப்போது இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் 59 லட்சம் டன் லித்தியம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 11, 2023, 12:12 PM IST
  • மின்சார வாகன பேட்டரிகள் மற்றும் லித்தியம் தயாரிப்பில் சீனா முன்னணியில் உள்ளது.
  • லித்தியம் நிலத்தடியில் காணப்படுகிறது.
  • நிலத்தில் இருந்து பிரித்தெடுத்து சுத்திகரிப்பது மிகவும் கடினமான பணி.
காஷ்மீரில் கிடைத்த லிதியம் புதையல் இந்தியாவின் தலைவிதியை மாற்றுமா..! title=

லித்தியம் உலகம் முழுவதும் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டு வரும் நிலையில்,  இது 21 ஆம் நூற்றாண்டின் பெட்ரோல் என்றும் அழைக்கப்படுகிறது. இப்போது இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் 59 லட்சம் டன் லித்தியம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய பொக்கிஷம் இருக்கும் நிலையில், உலகின் மூன்றாவது பெரிய லித்தியம் உற்பத்தி நாடாக இந்தியா உருவாகும். லித்தியத்தின் மிகப்பெரிய பயன்பாடு மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகளை தயாரிப்பதில் பயன்பாடு ஆகும். உலகம் முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களின் தேவை, உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரித்து வரும் நிலையில், இந்த லித்தியத்தால் இந்தியாவை மிகவும் பணக்கார மற்றும் சக்திவாய்ந்த நாடாக மாற்ற முடியும் என்று கூறப்படுகிறது.

நாட்டில் முதல் முறையாக லித்தியம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் சுமார் 59 லட்சம் டன் லித்தியம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரிசாசி மாவட்டத்தில் உள்ள சலால்-ஹைமானா பகுதியில் இந்திய புவியியல் ஆய்வு மையம் லித்தியத்தை கண்டுபிடித்துள்ளதாக சுரங்க அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவ்வளவு பெரிய லித்தியம் இருப்பு இந்தியாவின் வளர்ச்சிக்கும் பொருளாதாரத்திற்கும் எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பது இப்போது விவாதிக்கப்படுகிறது.

லித்தியம் என்றால் என்ன?
லித்தியம் ஒரு இரும்பு அல்லாத தாது. இது மிகவும் மென்மையான வெள்ளி போன்ற ஒரு கல். அதன் அடர்த்தி மிகவும் குறைவு. இருப்பினும், இது மிகவும் எதிர்வினையானது. அதாவது, மீதமுள்ள வேதியியல் கூறுகளுடன் கலந்தால், அதன் செயல் தொடங்குகிறது. அதனால்தான் இது மிகவும் பாதுகாப்பான முறையில் வைக்கப்படுகிறது. அதை பாதுகாப்பாக வைக்க, மண்ணெண்ணெய் அல்லது கனிம நீர் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் படிக்க | SBI இன்டர்நெட் பேங்கிங் பயன்படுத்துபவரா நீங்கள்? - இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

லித்தியம் எங்கே பயன்படுகிறது?

லித்தியத்தின் மிகப்பெரிய பயன்பாடு பேட்டரிகள் தயாரிப்பதில் உள்ளது. லித்தியம் காரணமாக, பல நாடுகளில் போட்டி நடக்கிறது. இந்தியாவிலும் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இருப்பினும், பேட்டரிகளின் விலை அதிகமாக இருப்பதால் மின்சார வாகனங்களின் விலை அதிகமாக உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், இந்தியாவே லித்தியத்தை உற்பத்தி செய்ய முடிந்தால், வாகனங்கள் மிகவும் மலிவானதாக மாறும்.

தற்போது இந்தியாவிற்கு தேவையான 96 சதவீத லித்தியம் மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்காக இந்தியாவின் அன்னிய செலாவணி அதிகம் செலவிடப்படுகிறது. 2020-21 ஆம் ஆண்டில், லித்தியம் பேட்டரிகளுக்காக இந்தியா 8,984 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. 2021-11ல் ரூ.13,838 கோடி மதிப்பிலான பேட்டரிகள் ஆர்டர் செய்யப்பட்டன. இந்தியா தனது லித்தியத்தில் 80 சதவீதத்தை வாங்கும் சீனாவிடம் தற்போது 4 மடங்கு அதிக கையிருப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

சந்திக்கும் சவால்கள்

இருப்பினும், இதிலும் ஒரு சிக்கல் உள்ளது. உண்மையில், லித்தியம் நிலத்தடியில் காணப்படுகிறது. அதை நிலத்தில் இருந்து பிரித்தெடுத்து சுத்திகரிப்பது மிகவும் கடினமான பணி. இந்தியாவில் அதன் தொழில்நுட்பம் இன்னும் வளர்ச்சியடையவில்லை. ஆஸ்திரேலியாவில் 63 லட்சம் டன் லித்தியம் இருப்பு உள்ளது. ஆனால் அது 6 லட்சம் டன்களை மட்டுமே உற்பத்தி செய்ய முடிகிறது.

தற்போது மின்சார வாகன பேட்டரிகள் மற்றும் லித்தியம் தயாரிப்பில் சீனா முன்னணியில் உள்ளது. இந்தியா இந்த இருப்பில் இருந்து சுரங்கம் மற்றும் உற்பத்தி செய்ய முடிந்தால், அது இந்த துறையில் நீண்ட தூரம் செல்ல முடியும். இந்த நடவடிக்கை இந்தியாவில் எலக்ட்ரானிக் கார்கள் மற்றும் பேட்டரிகளின் சந்தைக்கு பெரிய ஊக்கத்தை அளிப்பது மட்டுமல்லாமல், இந்தியாவும் ஒரு பெரிய பொருளாதாரமாக மாறும், மேலும் இது மாசுபாட்டைக் குறைப்பதில் பெரும் உதவியையும் பெறும்.

மேலும் படிக்க | ’லித்தியம் புதையல்’ ஜம்மு காஷ்மீரில் கண்டுபிடிப்பு..! 5.9 மில்லியன் டன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News