ஏன் விவசாயிகளின் கணக்கில் ரூ. 2000 செலுத்தப்படவில்லை? மத்திய அமைச்சர் விளக்கம்

PM Kisan Status: இன்றும் இந்த திட்டத்தின் பலன் கிடைக்காத பல விவசாயிகள் உள்ளனர். இத்தகைய சூழ்நிலையில், இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் தவிக்கும் விவசாயிகள், இத்திட்டத்தின் கீழ் பயனடைவதற்கான வாய்ப்பை மத்திய அரசு வழங்கி வருகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 30, 2021, 06:23 PM IST
  • நாட்டின் பல கோடி விவசாயிகள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
  • இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் தவிக்கும் விவசாயிகள்.
  • விவசாயிகளுக்கு நிதியுதவி நன்மைகளை வழங்குவதற்காக 2019 இல் தொடங்கப்பட்டது.
ஏன் விவசாயிகளின் கணக்கில் ரூ. 2000 செலுத்தப்படவில்லை? மத்திய அமைச்சர் விளக்கம் title=

PM Kisan Status: நாட்டின் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்க பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் சரியான நேரத்தில் விவசாயத்திற்காக பணம் பெறுகிறார்கள். ஏனென்றால், பணப் பற்றாக்குறையால் ஏழை விவசாயிகளால் சரியாக விவசாயம் செய்ய முடியாமல், கஷ்டப்பட்டு வருகின்றன என்பது அனைவருக்கும் தெரியும். இதன் காரணமாக பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனாவின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. நாட்டின் பல கோடி விவசாயிகள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி வருகின்றனர் மற்றும் பலனடைந்து வருகின்றனர். 

ஆனால் இன்றும் இந்த திட்டத்தின் பலன் கிடைக்காத பல விவசாயிகள் உள்ளனர். இத்தகைய சூழ்நிலையில், இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் தவிக்கும் விவசாயிகள், இத்திட்டத்தின் கீழ் பயனடைவதற்கான வாய்ப்பை மத்திய அரசு வழங்கி வருகிறது. மத்திய அரசு பல வழிகாட்டுதல்கள் மூலம் விவசாயிகளை இத்திட்டத்தின் கீழ் கொண்டு வருகிறது.

மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் (Narendra Singh Tomar), மக்களவையில் பேசும் போது, அவரிடம் பிரதம மந்திரி கிசான் யோஜனாவின் கீழ் இதுவரை பலன்களை பெற முடியாத விவசாயிகளுக்கான மத்திய அரசாங்கத்தின் திட்டம் என்ன என்று கேட்டபோது. அதற்கு பதிலளித்த மத்திய வேளாண் அமைச்சர், இதற்கான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் பதிவு முகாம்களை ஏற்பாடு செய்ய மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

ALSO READ | PM Kisan Yojana: பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தில் பெரிய மாற்றம்

இந்த வழியில் விவசாயிகள் தங்களை பதிவு செய்யலாம்:
வேளாண் அமைச்சர் நரேந்திர தோமர், விவசாயிகள் இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியாவிட்டால், அவர்கள் PM-Kisan போர்ட்டல் https://pmkisan.gov.in/ க்குச் சென்று Farmer Corner என்ற வசதியை கிளிக் செய்து தங்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று கூறினார். இப்போது விவசாயிகள் (Farmers) வீட்டில் இருந்தே எங்கும் அலையாமல் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். விவசாயிகள் தங்கள் சாகுபடி நில ஆவணங்கள், ஆதார் அட்டை, மொபைல் எண் மற்றும் வங்கி கணக்கு எண் மூலம் pmkisan.nic.in வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

csc மூலம் தொடர்பு கொள்ளவும்
பிரதமர் கிசான் யோஜனாவின் கீழ் நன்மைகளைப் பெற விவசாயிகள் தங்களை பதிவு செய்ய சி.எஸ்.சி. (Common Services Centers) மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று மத்திய வேளாண் அமைச்சர் கூறினார். 

மொபைல் செயலி மூலம் தகவல்:
விவசாயிகளுக்கு மேலும் தகவலுக்கு, பிரதமர் கிசான் போர்ட்டலில் விவசாயிகளுக்கு கிடைக்கும் வசதிகளை குறித்து ஒரு செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ALSO READ | PM Kisan திட்டத்தில் இவர்களுக்கெல்லாம் நன்மை கிடைக்காது? உங்களுக்குக் கிடைக்குமா?

இந்தத் திட்டம் 2019 இல் தொடங்கியது:
விவசாயிகளுக்கு நிதியுதவி நன்மைகளை வழங்குவதற்காக பிரதமர் கிசான் சம்மன் யோஜனா 2019 இல் தொடங்கப்பட்டது. இதன் மூலம், விவசாயிகளுக்கு அவர்களின் கணக்கில் நேரடியாக பணம் மாற்றப்படுகிறது. தற்போது வரை விவசாயிகள் இதில் எட்டு தவணைகளைப் பெற்றுள்ளனர். கடைசி தவணை மே மாதம் வந்தது, இதன் போது தொகை சுமார் 9 கோடியே 50 லட்சம் விவசாயிகளின் கணக்குகளுக்கு மாற்றப்பட்டது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News