Sri SankarDev Batadrava Satra Temple: தற்போது இந்திய ஒற்றுமை நீதி பயணம் (Bharat Jodo Nyay Yatra) அசாம் மாநிலத்தில் பயணித்து வருகிறது. அந்த பயணத்தில் பங்கேற்றுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மக்களை சந்தித்து வருகிறார். அசாம் மாநில பயணத்தின் ஒரு பகுதியாக புகழ் பெற்ற சங்கர்தேவ் ஜன்மஸ்தான் கோவிலுக்கு சென்று வழிபட ராகுல் காந்தி திட்டமிட்டு இருந்தார். அதற்கான அனுமதி வழங்க வேண்டும் என அசாம் மாநில அரசிடம் நேற்று கோரியிருந்தார்.
காங்கிரஸ் சாலை மறியல் போராட்டம்
ஆனால் பாஜக தலைமையிலான அசாம் மாநில அரசு அனுமதியை ரத்து செய்துவிட்டது. ஆனாலும் இன்று காலை கோவிலில் வழிபடுவதற்காக புறப்பட்ட காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதன் காரணமாக காங்கிரஸ் தொண்டர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க - கோயிலுக்கு செல்ல ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு - தமிழக காங்கிரஸ் போராட்டம்!
கோவிலுக்கு செல்ல ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு
ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்று வரும் பாரத் ஜோடோ நியாய யாத்திரை அஸ்ஸாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தை சென்றடைந்தது. இன்றைய நிகழ்ச்சியின்படி ராகுல் காந்தி நாகோன் மாவட்டத்தில் உள்ள படத்ரவா தான் பகுதியில் அமைந்துள்ள வைஷ்ணவ துறவி ஸ்ரீமந்த சங்கர்தேவ் கோவிலுக்கு செல்ல இருந்த நிலையில், கோவிலுக்கு செல்ல விடாமல் ராகுல் காந்தி தடுக்கப்பட்டார் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
முதலில் அனுமதி, பின்னர் மறுப்பு
இந்த சம்பவம் குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, "இன்று என்னை கோவிலுக்கு செல்ல விடாமல் தடுக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். முன்னதாக கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டதாகவும், ஆனால் இன்று மறுக்கப்படுவதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
ராகுல் காந்தி மட்டும் ஏன் செல்லக்கூடாது?
சட்டம் ஒழுங்கு நெருக்கடிக்கு மத்தியில், வைஷ்ணவ துறவிகள் அனைவரும் ஸ்ரீமந்த சங்கர்தேவ் பிறந்த இடத்திற்கு செல்லலாம். ஆனால் ராகுல் காந்தியால் மட்டும் செல்ல முடியாது எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும் படிக்க - "மோடி அரசியல் விழா" ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு ஏன் செல்லவில்லை -ராகுல் விளக்கம்
#WATCH | Assam | On his visit to Batadrava Than, Congress MP Rahul Gandhi says "We want to visit the temple (Batadrava Than). What crime have I committed that I cannot visit the temple?..." pic.twitter.com/1Y3cKs8Xn5
— ANI (@ANI) January 22, 2024
ஸ்ரீமந்த சங்கர் தேவ் குரு போன்றவர்
ஸ்ரீமந்த சங்கர் தேவ் மீது தனக்கும் நம்பிக்கை இருப்பதாகவும், அவரின் பிறந்த இடத்திற்கு செல்ல விரும்பியதாகவும் கூறினார். நான் மக்களை ஒன்றிணைப்பதில் நம்பிக்கை கொண்டுள்ளேன். வெறுப்பைப் பரப்பக்கூடாது. சங்கர்தேவ் நமக்கு குரு போன்றவர். அவர் நமக்கு வழிகாட்டியாக இருக்கிறார். அதனால்தான் அஸ்ஸாமுக்கு வரும்போது கண்டிப்பாக அவர் பிறந்த இடத்திற்கு சென்று வழிபடுவோம் என்று நினைத்தோம். அதற்கான அனுமதியை கேட்டிருந்தோம்.
திடீரென்று சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு?
ஜனவரி 11 ஆம் தேதி எனக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் திடீரென்று நேற்று (ஜனவரி 21, ஞாயிற்றுக்கிழமை) முதல் இங்கு சட்டம்-ஒழுங்கு ஏற்பட்டு உள்ளதாகக் கூறப்பட்டு அனுமதி மறுக்கப்பட்டது.
அதேநேரத்தில் இங்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த நிலையிலும் கௌரவ் கோகோய் உள்ளிட்ட அனைவரும் ஸ்ரீமந்த சங்கர் தேவ் கோவிலுக்கு செல்லலாம். ஆனால் ராகுல் காந்தி மட்டும் செல்ல முடியாதது மிகவும் ஆச்சரியமாக உள்ளது என்று ராகுல் காந்தி கூறினார்.
வாய்ப்பு கிடைக்கும் போது உண்மை சொல்கிறேன்
எதற்கான அனுமதி மறுக்கப்பட்டது என்று தெரியாது. சில காரணங்கள் இருக்கலாம். ஆனால் வாய்ப்பு கிடைக்கும் போது சொல்கிறேன். சங்கர்தேவ் காட்டிய வழியை அசாம் மற்றும் முழு நாடும் பின்பற்ற வேண்டும் என்று நான் நம்புகிறேன் என்று பத்திரிக்கையாளர்களிடம் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறினார்.
காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்
இதனையடுத்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், "அகில இந்திய காங்கிரஸ் அறிவுறுத்தலின்படி தலைவர் ராகுல்காந்தியை பின்தொடர்ந்த வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய பாஜகவின் வன்முறை செயலை கண்டித்தும், தலைவர் ராகுல் காந்தி வழிபடுவதற்கு அசாம் மாநில அரசு அனுமதி மறுத்ததற்கு எதிராகவும் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக எனது தலைமையில் இன்று (22.1.2024) மாலை 4.30 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவன் முகப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என அறிக்கையில் கூறியுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ