புது டெல்லி: COVID-19 க்கான தடுப்பூசி தயாரிக்கும் நிர்வாகத்தை தேசிய நிபுணர் குழு (National Expert Group) இன்று முதல் முறையாக சந்தித்தது. அந்த கூட்டத்திற்கு டாக்டர் வி கே பால், நிதி ஆயோக் மற்றும் செயலாளர் (Ministry of Health and Family Welfare) இணைத் தலைவராக தலைமை தாங்கினர்.
கடைசி கட்ட சோதனையில் குறிப்பாக கவனம் செலுத்துவதன் மூலம் தடுப்பூசி செயல்முறையை கண்காணிப்பது உட்பட, தடுப்பூசி சரக்கு மேலாண்மை மற்றும் விநியோக விதிமுறைக்கான டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்கம் மற்றும் செயல்படுத்தல் வழிமுறைகள் குறித்து நிபுணர் குழு விவாதித்தது.
நாட்டில் முதல் COVID-19 தடுப்பூசி யாருக்கு செலுத்துவது, யாரை தேர்ந்தெடுப்பதற்கு போன்றவற்றை குறித்து நீண்ட நேரம் அவர்கள் விவாதித்தனர் மற்றும் நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (NTAGI) நிலையான உள்ளீடுகளை நாடினர்.
ALSO READ | நீண்டகால காத்திருப்பு முடிவுக்கு வந்ததா... கொரோனா தடுப்பு மருந்து தயார் என்கிறது ரஷ்யா!!
COVID-19 தடுப்பூசிக்கான கொள்முதல் வழிமுறைகளை இந்த குழு ஆராய்ந்தது, இதில் உள்நாட்டு, சர்வதேச உற்பத்தி மற்றும் தடுப்பூசிக்கு மக்கள் குழுக்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கான வழிகாட்டுதல் கொள்கைகள் மேற்கொள்ளும்.
COVID-19 தடுப்பூசி கொள்முதல் செய்வதற்குத் தேவையான நிதி ஆதாரங்கள் மற்றும் அதற்கான நிதியுதவிக்கான பல்வேறு விருப்பங்கள் குறித்து நிபுணர் குழு விவாதித்தது. விநியோக தளங்கள், COVID-19 தடுப்பூசியை எப்படி விநியோகம் செய்வது தொடர்புடைய உள்கட்டமைப்பு ஆகியவற்றை பற்றி ஆலோசனை செய்யப்பட்டன.
ALSO READ | Corona Vaccine: மனித பரிசோதனையின் சில முக்கிய அம்சங்கள்!!
தடுப்பூசி பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தொடர்பான பிரச்சினைகள் மேற்கொள்ளப்பட்டு, தேவையான விழிப்புணர்வு உருவாக்குவதன் மூலம் சமூக ஈடுபாட்டிற்கான வெளிப்படையான தன்மை குறித்து விவாதிக்கப்பட்டது