புதிய முதல்வர் யார்..? 48 முதல் 72 மணி நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: சுர்ஜேவாலா

Karnataka CM Decision: கர்நாடகா முதல்வர் தேர்வு குறித்து இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. 48 முதல் 72 மணி நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என விளக்கம் அளித்த சுர்ஜேவாலா.

Written by - Shiva Murugesan | Last Updated : May 17, 2023, 05:24 PM IST
  • முதல்வர் பெயர் முடிவாகவில்லை.. அடுத்த 24 மணி நேரத்தில் கர்நாடகாவில் புதிய முதல்வர் பதவியேற்பார்
  • அடுத்த 48-72 மணி நேரத்தில் கர்நாடகாவில் புதிய அமைச்சரவை அமைக்கப்படும் - ரன்தீப் சிங் சுர்ஜேவாலா.
  • பதவியேற்பு விழா ஏற்பாடுகள் நடக்கும் நிலையில், முதல்வர் தேர்வு இறுதி ஆகவில்லை என்று சுர்ஜேவாலா டுவிஸ்ட்
புதிய முதல்வர் யார்..? 48 முதல் 72 மணி நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: சுர்ஜேவாலா title=

Karnataka News In Tamil: கர்நாடகாவில் புதிய முதல்வரை தேர்வு செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புதிய முதல்வர் பதவிக்கு சித்தராமையாவின் பெயர் முடிவாகிவிட்டதாக தகவல் வெளியானதையடுத்து, கர்நாடகா காங்கிரஸ் பொறுப்பாளர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா, முதல்வர் பெயர் இன்னும் முடிவாகவில்லை, அடுத்த 48-72 மணி நேரத்தில் கர்நாடகாவில் புதிய அமைச்சரவை அமைக்கப்படும் என்று சுர்ஜேவாலா கூறியுள்ளார்.

அடுத்த 24 மணி நேரத்தில் கர்நாடகாவில் புதிய முதல்வர் பதவியேற்பார்:
கர்நாடகா மாநில முதல்வர் தேர்வு குறித்து காங்கிரஸ் மேலிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் ஹை கமாண்ட் உடனான பல சுற்று ஆலோசனைகளுக்கு பிறகு, ரன்தீப் சிங் சுர்ஜேவாலா அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லம் அருகே செய்தியாளர்களை சந்தித்தார். "அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். புதிய முதல்வர் குறித்து முடிவு எடுக்கப்பட்டவுடன் அதிகாரப்பூர்வமாக தெரிவிப்போம். புதிய முதல்வர் குறித்து வெளியாகும் யூகங்களுக்கும் செவிசாய்க்க வேண்டாம். அடுத்த 48 முதல் 72 மணி நேரத்தில் கர்நாடகாவில் புதிய அமைச்சரவை அமையும் என்றார். மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் கர்நாடகாவில் புதிய முதல்வர் பதவியேற்பார் என்று ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறினார். 

முதல்வர் பதவியேற்பு விழா கந்தீரவா மைதானத்தில் நடக்கவுள்ளது:
கந்தீரவா மைதானத்தில் முதல்வர் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாகவும், வியாழக்கிழமை மாலை 3.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், முதல்வர் தேர்வு இறுதி ஆகவில்லை என்று சுர்ஜேவாலா டுவிஸ்ட் கொடுத்துள்ளார்.

மேலும் படிக்க - Karnataka முதலமைச்சர் யார்? கையைப் பிசையும் காங்கிரஸ்! வேடிக்கை பார்க்கும் பாஜக

அடுத்த முதல்வர் சித்தராமையா? பரவும் செய்திகள்:
சித்தராமையா தான் அடுத்த முதல்வர் என்ற செய்தி பரவியதையடுத்து, சித்தராமையா ஆதரவாளர்கள் மாநிலத்தின் பல பகுதிகளிலும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சித்தராமையா இல்லம் முன்பு ரசிகர்கள் பேனர்களை கட்டி கொண்டாடினர். இதனையடுத்து பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்திய ரன்தீப் சுர்ஜேவாலா புதிய முதல்வர் தேர்வு குறித்து விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் போட்டிக்கு சித்தராமையா மற்றும் சிவக்குமார் இடையே கடும் போட்டி:
கர்நாடகாவின் புதிய முதல்வரை தேர்வு செய்யும் பணி கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் பதவிக்கு முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் கேபிசிசி தலைவர் டிகே சிவக்குமார் இடையே போட்டி நீடித்து வருகிறது. இருதலைவர்களும் டெல்லியில் முகாமிட்டு உள்ளனர். முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் கேபிசிசி தலைவர் டிகே சிவகுமார் இருவரும் தனித்தனியாக ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை சந்தித்து பேசியுள்ளனர்.

மேலும் படிக்க - Karnataka: கர்நாடகாவின் அடுத்த முதல்வர் சித்தராமையா? ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

முதல்வர் சித்தராமையா? துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்?
முன்னதாக, கர்நாடகாவின் புதிய முதல்வராக முன்னாள் முதல்வர் சித்தராமையா பதவியேற்பார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாகவும், அதேபோல முதல்வர் போட்டியில் இருந்த டி.கே.சிவக்குமாருக்கு துணை முதல்வர் பதவியுடன் செல்வாக்கு மிக்க இலாகாக்கள் ஒதுக்கப்படுவதாகவும் தகவல் வெளியானது. அதுமட்டுமில்லாமல் ராகுல் காந்தி தரப்பில் இருந்து சித்தராமையாவுக்கு ஆல் தி பெஸ்ட் மற்றும் முதல்வர் பதவியை நன்றாகக் கையாளுங்கள் என்று கூறியதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த செய்தி நாடு முழுவதும் பரவியதை அடுத்து, சித்தராமையா ஆதரவாளர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து கேபிசிசி தலைவர் டி.கே.சிவகுமார் அதிருப்தி தெரிவித்ததையடுத்து, கர்நாடகா காங்கிரஸ் பொறுப்பாளர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க - Disproportionate Assets Case: டி.கே.சிவகுமாருக்கு எதிரான மனு.. விசாரணையை ஒத்திவைத்த சுப்ரீம் கோர்ட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News