ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஜெயாடிவி சிஇஓ விவேக் ஜெயராமன் மார்ச் 9-ல் மீண்டும் ஆஜராக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்ட 74 நாட்கள் சிகிச்சை அளித்தும் பலன் இன்றி டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார்.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை, ஓய்வு பெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையிலான, விசாரணை கமிஷன் விசாரித்து வருகிறது. இந்த கமிஷன், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், அப்பல்லோ மருத்துவமனை, முன்னாள் தலைமை செயலர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராமமோகன ராவ், உறவினர்கள் தீபா, விவேக் ஜெயராமன், தீபக் உள்ளிட்ட பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஜெ. மரணம் தொடர்பான ஜெயாடிவி சிஇஓ விவேக் ஜெயராமன் மார்ச் 9-ல் மீண்டும் ஆஜராக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.