கேரளாவின் வடமேற்கு கடற்கரையில் உள்ள கோழிக்கோடு மாவட்டம் சுற்றுலாவிற்கு மிகவும் புகழ் பெற நகரமாகும். மேற்கில் அரபிக்கடலால் சூழப்பட்டுள்ள இப்பிரதேசத்தில் கடற்கரைகள் சுற்றுலா அம்சங்கள் நிறைந்தது.
கோழிக்கோடு பேப்பூர் கடற்கரையில் அலைகளுடன் நடந்து செல்ல மாநில சுற்றுலாத் துறையால் மிதக்கும் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர். அலையோடு அலையாக பயணிப்பது ஒரு சுகானுபவமாக இருக்கும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.
அலையின் மீது மிதக்கும் பாலத்தை கீழே வீடியோவில் காணலாம்:
Kerala | A floating bridge has been set up by the state tourism department at Beypore beach in Kozhikode to walk along with waves pic.twitter.com/6SGRyUEn2J
— ANI (@ANI) March 27, 2022
கோழிக்கோட்டில் உள்ள பேப்பூர் மற்றும் கப்பட் பீச் ஆகியவை, மக்களை ஈர்க்கும் மிக சிறந்த சுற்றுலா தளங்களாகும். கொச்சிக்கு அடுத்தபடியாக பெரிய துறைமுகம் இந்த பேப்பூர்தான்.
கோழிக்கோட்டில் கட்டாயம் காண வேண்டியவை என பல இடங்கள் இருக்கின்றன. பேப்பூர் பீச், கப்பட் பீச், பெருவண்ணாமுழி அணை, திக்கொட்டி லைட் ஹவுஸ், துஷாகிரி நீர்வீழ்ச்சி, மனச்சிரா ஸ்கொயர், பழசிராஜா அருங்காட்சியகம், லயன்ஸ் பார்க், தலி கோவில், கக்கயம், கலிபொயிக்கா, பினானட்டேரியம் உள்ளிட்ட பல இடங்கள் இதில் அடங்கும்.
துறைமுகம், கப்பல் தளம், கடலுக்குள் செல்லும் ஒரு பாலம், கடலுண்டி பறவைகள் சரணாலயம் ஆகியவையும் பேப்பூரில் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கும் பகுதியாகும்.
மேலும் படிக்க | காட்டில் ஒரு ‘கணவன் - மனைவி’ சண்டை; பெண் சிங்கத்தை உக்கிரமாக தாக்கும் ஆண் சிங்கம்!
மேலும் படிக்க | பறவை கூட்டை தாக்கிய பாம்பு; சும்மா இருந்தா பறவை!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR