ஒரே நேரத்தில் 2 அரசு வேலை... 8 வருடங்களாக அரசின் கண்களில் மண்ணை தூவிய நபர்!

கோரக்பூரில் ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு அரசுப் பணிகளைச் செய்து கடந்த 8 ஆண்டுகளாக இரண்டு வேலைகளிலும் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ஆச்சரியமான வழக்கு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 24, 2023, 06:38 PM IST
  • இணையதளத்தில் புகார் வந்ததையடுத்து, மின்சாரக் கழகம் இந்த விஷயத்தை விசாரித்தது.
  • மின்வாரிய அதிகாரிகள் விசாரணையில் மோசடி அம்பலமானது.
  • கடந்த 8 ஆண்டுகளாக 2 துறைகளின் கண்களில் மண்ணைத் தூவி சம்பளத்துடன் மற்ற வசதிகளையும் அனுபவித்து வந்த நபர்.
ஒரே நேரத்தில் 2 அரசு வேலை... 8 வருடங்களாக அரசின் கண்களில் மண்ணை தூவிய நபர்! title=

அரசாங்க வேலை என்பது பெரும்பாலானோரின் லட்சியமாகவே உள்ளது. படித்து முடித்த பிறகு, பெரும்பாலானோர் அரசு வேலை செய்ய வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் அரசு வேலை கிடைப்பது மிக கடினம் என்ற நிலை தான் உள்ளது என்பதை மறுக்கவே முடியாது. ஆனால், அப்படிப்பட்ட நேரத்தில், கோரக்பூரில் ஒருவர், ஒரே நேரத்தில் இரண்டு அரசுப் பணிகளைச் செய்து, கடந்த 8 ஆண்டுகளாக இரண்டு வேலைகளில் இருந்தும் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் ஒரு ஆச்சரியமான, அதிர்ச்சியான வழக்கு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கோரக்பூரில் உள்ள கேம்பியர்கஞ்ச் பகுதியில் உள்ள சோனௌரா புசுர்க் கிராமத்தில் வசிக்கும் தர்கேஷ்வர் சிங், பகலில் மின்சாரக் கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் லைன்மேனாகவும், இரவில் பாதுகாவலராகவும் பணியாற்றினார்.

இரண்டு அரசுத் துறைகளின் கண்களில் மண்ணை தூவிய நபர்

கடந்த 8 ஆண்டுகளாக இரண்டு துறைகளின் கண்களில் மண்ணைத் தூவி சம்பளத்துடன் மற்ற வசதிகளையும் அனுபவைத்து வந்தார் தாரகேஷ்வர் சிங். பகலில் மின்வாரியத்தில் உள்ள கேம்பியர்கஞ்ச் மின்பகிர்மான பிரிவில் லைன்மேனாக பணிபுரிந்து வந்த இவர், இரவில் ஊர்க்காவலராக பணிபுரிந்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அவர் எப்போது தூங்கினார், எப்படி இரண்டு வேலைகளையும் செய்தார், எப்படி இது சாத்தியமானது என்பது இன்னும் தெரியவில்லை. இது தொடர்பான விசாரணை விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை

தர்கேஷ்வரின் மோசடி அம்பலமானது எப்படி?

கோரக்பூரில் உள்ள கேம்பியர்கஞ்ச் பகுதியில் உள்ள சோனௌரா புசுர்க் கிராமத்தில் வசிக்கும் தர்கேஷ்வர், கடந்த 8 ஆண்டுகளாக இரண்டு அரசு வேலைகளை செய்து வந்தார். அவரது சொந்த கிராமத்தைச் சேர்ந்த பிரமோத் ராய் மற்றும் அவரது குடும்பத்தினர் இது குறித்து முதல்வர் இணையதளத்தில் புகார் செய்த போது அவரது இந்த மோசடி செயல் வெளிச்சத்துக்கு வந்தது.

மேலும் படிக்க | DA Hike: 3 லட்சம் ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி... அகவிலைப்படியை உயர்த்திய மாநில அரசு!

மின்வாரிய அதிகாரிகள் விசாரணையில் மோசடி அம்பலமானது

முதல்வர் இணையதளத்தில் புகார் வந்ததை அடுத்து, மின்சார பகிர்மான கழகம் இந்த விஷயத்தை விசாரணை செய்தது. அதில் தாரகேஷ்வர் சிங் செய்த மோசடி அம்பலமாகி அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது. இப்போது அவரை பணிநீக்கம் செய்ய மின்சாரத் துறை தயாராகி வருகிறது, அதற்கான விசாரணை அறிக்கை பனாரஸ் பிரிவில் உள்ள தலைமை அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனுடன், அவரது மோசடி வழக்கு குறித்த தகவல், ஊர்க்காவல் துறைக்கும் அளிக்கப்பட்டுள்ளது.  தர்கேஷ்வர் சிங் பணிநீக்கம் செய்யப்பட்டதோடு, அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு வேலை கூட கிடைக்காமல் பலர் போராடி வரும் நிலையில், இவர் எப்படி இரண்டு வேலைகளில், அதுவும் அரசு வேலைகளில் நீடித்து இவ்வளவு நாள் ஏமாற்றி வந்துள்ளார் என பலருக்கு அதிர்ச்சியும் ஆச்சர்யமும் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலை மாதம் 2 பெரிய குட் நியூஸ்...டிஏ உடன் இதுவும் அதிகரிக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News