கேரளாவைச் சேர்ந்த 100 வயதைத் தாண்டிய மூதாட்டி ஒருவர் அனைவரும் வியக்கும் வகையில் சாதனை செய்துள்ளார். இந்த வயதில், கேரள எழுத்தறிவு தேர்வில் (Kerala State Literacy Mission) குட்டியம்மா 100க்கு 89 மதிப்பெண்கள் எடுத்து ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளார். 104 வயது மூதாட்டி குட்டியம்மா கேரள மாநில எழுத்தறிவு மிஷன் தேர்வில் கடின உழைப்பால் சிறப்பாக தேர்ச்சி பெற்று வயது ஒரு தடை அல்ல என்பதை நிரூபித்துள்ளார்
கேரளாவைச் (Kerala) சேர்ந்த குட்டியம்மா ஒரு மகத்தான உதாரணம். குட்டியம்மா பள்ளிக்குச் சென்றதில்லை என்பதும் எழுதப் படிக்கத் தெரியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. எழுத்தறிவுத் தேர்வுக்குத் தயாராகும் போது தான் முதன்முறையாக காகிதத்தையும் பேனாவையும் பயன்படுத்தினார். தினமும் காலையிலும் மாலையிலும் தவறாமல் வகுப்பில் கலந்து கொண்டார். அவருக்கும் காது கேளாமை இருந்த போதிலும், அதையெல்லாம் தாண்டி சாதனை படைத்துள்ளார்.
ALSO READ | திடீரென கணக்கில் வந்த ஒரு கோடி பணம்; வரம் என நினைத்தது சாபமானது..!!
கல்வி அமைச்சர் ட்விட்டரில் வாழ்த்து
கேரள கல்வி அமைச்சர் வாசுதேவன் சிவன்குட்டி, மாநில அரசின் தொடர் கல்வி முயற்சியால் நடத்தப்பட்ட தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற 104 வயது குட்டியம்மாவின் படத்தை சமூக ஊடகங்களில் வெள்ளிக்கிழமை வெளியிட்டார். அவர் தனது ட்வீட்டில், 'கோட்டயத்தைச் சேர்ந்த 104 வயதான குட்டியம்மா, கேரள மாநில எழுத்தறிவு மிஷன் நடத்திய தேர்வில் 89/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். சாதிக்க வயது ஒரு தடையல்ல என்பதை உணர்த்தியுள்ள குட்டியம்மாவிற்கும், புதிதாகக் படிப்பறிவு பெற்ற மற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.'
104-year-old Kuttiyamma from Kottayam has scored 89/100 in the Kerala State Literacy Mission’s test. Age is no barrier to enter the world of knowledge. With utmost respect and love, I wish Kuttiyamma and all other new learners the best. #Literacy pic.twitter.com/pB5Fj9LYd9
— V. Sivankutty (@VSivankuttyCPIM) November 12, 2021
கேரள மாநில எழுத்தறிவு மிஷன் முயற்சிகளுக்கு மாநில அரசு நிதியளிக்கிறது. இந்த முயற்சி அனைத்து குடிமக்களுக்கும் கல்வியறிவு, தொடர்ச்சியான கல்வி மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்றலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போது, இது 4, 7, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு சமமான பாடத்திட்டங்களை வழங்குகிறது.
ALSO READ | மனதை உருக்கும் 90 வயது மூதாட்டி! உணவுக்கு கையேந்தும் அவலநிலை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR