உ.பி., பலாத்காரத்துக்கு உள்ளாகி, ஆசிட் வீசப்பட்ட பெண்ணுக்கு அருகே காவலுக்கு இருந்த 3 பெண் காவலர்கள் போனில் செல்ஃபி எடுத்துக் கொண்டதால் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
பலாத்காரம் மற்றும் ஆசிட் வீசப்பட்ட பெண்ணை கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு அருகே 3 பெண் காவலர்கள் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டிருந்தனர்.
மருத்துவமனை படுக்கையில் பாதிக்கப்பட்ட பெண் படுத்திருந்த நிலையில், அதன் அருகே 3 பெண் காவலர்களும் சிரித்தபடி செல்ஃபி எடுத்துக் கொண்டனர். இது தொடர்பான புகைப்படம் சமூக தளத்தில் வெளியானதை அடுத்து மூன்று பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணை நேரில் சந்தித்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அவருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு தரவும், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.