ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக ராஜினாமா கடிதத்தில் விளக்கம்...
சமீபகாலமாக மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் இடையே நிதி விவகாரத்தில் மோதல் வலுத்து வருகிறது. வராகடன் பிரச்னையில் சிக்கி தவித்து வரும் வங்கிகளிடம் காட்டப்பட்டு வரும் கெடுபிடியை ரிசர்வ் வங்கி தளர்த்த வேண்டும். ரிசர்வ் வங்கியிடம் உள்ள பல லட்சம் கோடி ரூபாயை நாட்டின் வளர்ச்சி பணிகளுக்காக விடுவிக்க வேண்டும் என மத்திய அரசு கூறி வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் வரும் 19 ஆம் தேதி உர்ஜித் படேல் தனது பதிவியினை ராஜினாமா செய்யவுள்ளதாக வதந்திகள் பரவி வந்தது.ஆனால், உர்ஜித் படேல் ராஜினாமா தொடர்பாக்க வெளியான செய்திகள் அனைத்தும் தவறு என கூறி இருந்தனர்.
கடந்த அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் விரல் ஆசாரியா அவர்கள் "ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தை மதிக்காத அரசுகள், மிக விரைவில் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும்" என விமர்சித்திருந்தார். இந்த விமர்சனத்தால் ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. இந்த சூழ்நிலையில், நவம்பர் 19 ஆம் தேதி ரிசர்வ் வங்கியின் மத்திய வாரிய கூட்டம் நடந்தது. இதன் பிறகு பிரச்னை முடிவுக்கு வந்ததாக தொடர்ந்து கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஊர்ஜித் பட்டேல், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 2016 செப்டம்பர் மாதம் பணியமர்த்தப்பட்ட இவர், தனிப்பட்ட காரணங்களுக்காக உடனடியாக பதவி விலகுவதாக ராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார். இவரின் பதவிகாலம் முடிவடைய இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் இவர் ராஜினாமா செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
RBI Governor Urjit Patel resigned on Monday, citing "personal reasons"
Read @ANI story | https://t.co/Y8vjgcIucM pic.twitter.com/B3qwWxMvoH
— ANI Digital (@ani_digital) December 10, 2018