Hathras Case: பெண்ணின் உடல் இரவில் தகனம் செய்யப்பட்டதற்கான காரணம் இதுதான்: விளக்கமளித்த UP Govt.

மாநிலத்தில் தற்போதுள்ள பாஜக அரசாங்கத்தை இழிவுபடுத்துவதற்கும் அவதூறு ஏற்படுத்துவதற்கும் எதிர்க்கட்சிகள் சதித்திட்டங்களை மேற்கொண்டு வருவதாக உத்தரபிரதேச அரசு தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 6, 2020, 01:25 PM IST
  • காலையில் பெரிய அளவிலான வன்முறைகளைத் தவிர்ப்பதற்காக இரவிலேயே உடலை தகனம் செய்ய வேண்டியிருந்தது - உ.பி. அரசு.
  • பிரேத பரிசோதனை முடிந்ததும், தகனத்தை விரைவுபடுத்துவதற்கு எந்தவொரு மோசமான நோக்கமும் இருக்க முடியாது-உ.பி. அரசு.
  • ஹத்ராஸ் வழக்கில் CBI விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது.
Hathras Case: பெண்ணின் உடல் இரவில் தகனம் செய்யப்பட்டதற்கான காரணம் இதுதான்: விளக்கமளித்த UP Govt. title=

உத்தரபிரதேச அரசு செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 6) உச்சநீதிமன்றத்தில், பெரிய அளவிலான வன்முறையைத் தவிர்ப்பதற்காகவே, ஹத்ராசில் (Hathras) சிலரால் தாக்கப்பட்டு மரணமடைந்த பெண்ணின் உடலை நள்ளிரவில் தகனம் செய்ததாக கூறியது. உ.பி. அரசாங்கம் (UP Government) உச்ச நீதிமன்றத்திற்கு அளித்த வாக்குமூலத்தில், "அசாதாரண சூழ்நிலைகள், பாதிக்கப்பட்டவரை இரவில் தகனம் செய்வதற்கான அசாதாரண நடவடிக்கையை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்தை கட்டாயப்படுத்தின” என்று கூறியுள்ளது.

"ஹத்ராஸில் உள்ள மாவட்ட நிர்வாகம் செப்டம்பர் 29 காலை முதல் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் தர்ணா நடந்த விதம் குறித்து பல உளவுத்துறை தகவல்களைப் பெற்று வருகிறது. மேலும் இந்த விவகாரத்திற்கு வேறு வண்ணம் பூசப்பட்டு, இது வேறு விதமாக சிலரால் கையாளப்பட்டு வருகிறது. இந்த பிரச்சனைக்கு சாதி / வகுப்புவாத வண்ணம் கொடுக்கப்பட்டு வருகிறது" என்று உ.பி. அரசு கூறியுள்ளது.

பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் இரு சமூகங்கள் / சாதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் ஊடகங்கள் மறுநாள் காலையில் கிராமத்தில் ஒன்றுகூடுவார்கள் என்று குறிப்பிட்ட உள்ளீடுகள் கிடைத்ததாக உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது. அப்படிப்பட்ட சூழல் இக்கட்டான சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்."

ALSO READ: Hathras Case: வன்முறையை தூண்ட சதி தொடர்பாக 19 FIR பதிவு செய்யப்பட்டுள்ளன..!!!

"இதுபோன்ற அசாதாரண மற்றும் கடுமையான சூழ்நிலைகளை புரிய வைத்து, அனைத்து மத சடங்குகளுடன் அந்த பெண்ணின் உடலை இரவில் தகனம் செய்ய, அவரது பெற்றோரை ஒப்புக்கொள்ள வைக்க மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்தது. காலையில் பெரிய அளவிலான வன்முறைகளைத் தவிர்ப்பதற்காக இரவிலேயே உடலை தகனம் செய்ய வேண்டியிருந்தது. அப்பெண் இறந்து பிரேத பரிசோதனைக்குப் பிறகு சுமார் 20 மணி நேரத்திற்கும் மேலாக அவரது உடல் அப்படியே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது" என்று உ.பி. அரசாங்கம் விளக்கியது.

பிரேத பரிசோதனை முடிந்ததும், தகனத்தை விரைவுபடுத்துவதற்கு எந்தவொரு மோசமான நோக்கமும் இருக்க முடியாது என்று மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் (Supreme Court) கூறியது. "சில சொந்த நலன்களால் திட்டமிடப்பட்ட சாதி பிளவுகளின் விளைவாக ஏற்படக்கூடிய வன்முறை சூழ்நிலையைத் தவிர்ப்பது தவிர, இதற்கு வேறு எந்த காரணமும் இல்லை" என்றும் உ.பி. அரசின் சார்பில் கூறப்பட்டது.

மாநிலத்தில் தற்போதுள்ள பாஜக அரசாங்கத்தை இழிவுபடுத்துவதற்கும் அவதூறு ஏற்படுத்துவதற்கும் எதிர்க்கட்சிகள் சதித்திட்டங்களை மேற்கொண்டு வருவதாக உத்தரபிரதேச அரசு தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் "சாதி / வகுப்புவாத கலவரங்களை துவக்க வேண்டுமென்றே திட்டமிட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று அரசு தரப்பு கூறியுள்ளது.

ஹத்ராஸ் வழக்கில் CBI விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரை செய்துள்ளதாகவும், ஹத்ராஸில் 19 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து தாக்கியதாகக் கூறப்படும் வழக்கு விசாரணைக்கு சிபிஐக்கு உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்திடம் (Supreme Court)  கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: Hathras Case: அமெரிக்க பாணியில் உ.பி.யை எரிக்க வெளிநாட்டு சதி.. சிக்கியது ஆதாரம்..!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News