தேவையற்ற குற்றச்சாட்டுகள் துரதிஷ்டவசமானது: NRC விவகாரத்தில் ராஜ்நாத் சிங்

அசாம் மாநில இறுதி தேசிய குடிமக்கள் வரைவு பட்டியல் இறுதியானது அல்ல என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராஜ்யசபாவில் விளக்கம்! 

Last Updated : Aug 4, 2018, 12:02 AM IST
தேவையற்ற குற்றச்சாட்டுகள் துரதிஷ்டவசமானது: NRC விவகாரத்தில் ராஜ்நாத் சிங் title=

அசாம் மாநில இறுதி தேசிய குடிமக்கள் வரைவு பட்டியல் இறுதியானது அல்ல என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராஜ்யசபாவில் விளக்கம்! 

சமீபத்தில், அசாம் மாநிலம் தேசிய குடிமக்கள் வரைவு பட்டியளை வெளியிட்டது. இந்த வரைவு பட்டியல் வெளியிடப்பட்டதையடுத்து, சுமார் 40 லட்சம் பேருக்கு குடியுரிமை இல்லாத நிலைமை உருவாகியுள்ளது. அவர்கள் தகுந்த ஆவணங்கள் சமர்பிக்கவில்லை என்றால், மாநிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டுவர் என்று தெரிகிறது. 

அசாமில் 1951 ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போது தான் தேசிய குடிமக்கள் பதிவில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வங்க தேசத்திலிருந்து வந்து தங்கியுள்ள முஸ்லிம் அகதிகளை குறிவைக்கும் நோக்கில் தான் இந்த நடவடிக்கை எடுத்ததாகவும் விமர்சித்து வந்தனர். 

இந்த விவகாரம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் அமளியை ஏற்படுத்தியதையடுத்து,  மாநிலங்களவை கடந்த இரு தினங்களாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மாநிலங்களவையில் இன்று பேசியபோது...! 

குடியுரிமை வரைவு குறித்து அனைத்தும் சட்டப்படியும் வெளிப்படைத்தன்மையுடனும் நடத்தப்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள வழிமுறைகளின் படியே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. நான் அனைவருக்கும் ஒன்றை உறுதிபட சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்திய குடிமக்கள் யாவரும் குடியுரிமை பட்டியலில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள். எனவே அது குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். 

அசாம் குடியுரிமை பட்டியல் தொடர்பான பணிகள், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது 1985 ஆம் ஆண்டு தொடங்கியது.  மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்தபோது இது தொடர்பான பணிகள் நடைபெற்று வந்தன.

இதுதொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பின் கீழ் நடந்து வருகிறது. இப்போது வெளியிடப்பட்டுள்ள இந்த பட்டியல் இறுதியானதல்ல. ஒவ்வொருவருக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும்.  

இந்த விவகாரம் தொடர்பாக தேவையற்ற குற்றச்சாட்டுகளை கூறுவது துரதிர்ஷ்டவசமானது. அசாம் குடிமக்கள் பதிவேடு தொடர்பாக பொதுமக்களிடம் பயத்தை உருவாக்கும் செயல் கடும் கண்டனத்துக்கு உரியது என தெரிவித்துள்ளார்

 

Trending News