அடிப்படை தேவைகளுக்காக பணம் எடுக்க ஹபீஸ் சயீத்தை அனுமதிக்க பாகிஸ்தான் ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் கெஞ்சுகிறது!!
ஐ.நா-வால் நியமிக்கப்பட்ட உலகளாவிய பயங்கரவாதி ஜமாத்-உத்-தாவா தலைவர் ஹபீஸ் சயீத் தனது வங்கிக் கணக்கை தனிப்பட்ட செலவுகளுக்கு பயன்படுத்த அனுமதிக்குமாறு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையை பாகிஸ்தான் அணுகியுள்ளது. ஹபீஸ் சயீத் தனது வங்கிக் கணக்கை 'அடிப்படை செலவினங்களுக்காக' தனது குடும்பத்திற்கு உதவ ஐ.நா குழு அனுமதித்துள்ளது.
மும்பையில் 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி பயங்கர குண்டுவெடிப்பு நடந்தது. இதில், 166-க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாயின. இந்த தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர், ஹபீஸ் சையத். இவர், பாகிஸ்தானில் தனது வங்கிக்கணக்கை வைத்துக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று, ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் முறையிட்டது. இதை தொடர்ந்து, “குடும்பத்துக்கு தேவையான அடிப்படை செலவுகளுக்கு மட்டும்” வங்கிக்கணக்கை வைத்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் ஐநா அனுமதி அளித்துள்ளது.
Pak approaches UNSC to allow release of monthly expenses for terrorist Hafiz Saeed, committee allows request
Read @ANI Story | https://t.co/3hXh7rVFBJ pic.twitter.com/w16k5Sb3Bm
— ANI Digital (@ani_digital) September 26, 2019
ஹபீஸ் சையத் - இன் குடும்பம் 4 பேரைக்கொண்டது. குடும்பத்தலைவன் என்கிற முறையில் உணவு, உடை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் சையத் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். எனவே, இந்த கணக்குக்கு சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பாகிஸ்தான் ரூபாய் வழங்க, தங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் ஐநாவிடம் பாகிஸ்தான் அரசு கோரிக்கை வைத்தது. இதில் உணவுக்கு 70,000, பொது பயன்பாட்டு செலவுகளுக்கு 25,000, மருத்துவ செலவுகளுக்கு 25,000 மற்றும் குழந்தைகளின் கல்விக்காக 30,000 என மொத்தம் 1,50,000 பாகிஸ்தான் ரூபாய்க்கு வரைவு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது..
இந்நிலையில், இவர் தீவிரவாத அமைப்புகளுக்கு பணம் வழங்கியதாக ஒரு வழக்கு லாகூர் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் அமர்வில் இருந்த இரண்டு நீதிபதிகள் மாற்றப்பட்டு, அவர்களுக்கு பதிலாக புதிய நீதிபதிகள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.