அமர்நாத் யாத்திரை முதல் குழு காஷ்மீரில் இருந்து புறப்பட்டது. ஆண்டுதோறும் பனிலிங்கத்தை தரிசிக்க இந்தியாவில் உள்ள பல இடங்களில் இருந்தும், பக்தர்கள் அமர்நாத் செல்வது வழக்கம். 51 சக்தி பீடங்களில் ஒன்றான மகாமாயா சக்தி பீட உறைவிடமான அமர்நாத் குகையில் உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த ஆண்டு யாத்திரை இன்று (ஜூன்28) துவங்கியது. காஷ்மீரின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் இருந்து 2 குழுக்கள் யாத்திரைக்கு புறப்பட்டு சென்றன.
முதல்கட்டமாக பகவதிநகரில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் இருந்து பக்தர்கள் குழு புறப்பட்டது சென்றது.கவர்னர் மனோஜ் சின்கா கொடி அசைத்து துவக்கி வைத்த நிலையில், பக்தர்கள் ஹர, ஹர மஹாதேவா என்ற கோஷங்களை பக்தி பரவசத்துடன் எழுப்பினர். யாத்திரையை முன்னிட்டு (Spiritual Tourism), பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
வருடாந்திர அமர்நாத் யாத்திரைக்காக யாத்திரை பாதை முழுவதிலும் மின்னணு கண்காணிப்பு மற்றும் அணுகல் கட்டுப்பாட்டு ஏற்பாடுகள் உட்பட இது வரை இல்லாத அளவு பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில், ஆன்மீக யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து உட்பட ஜம்மு பகுதியில் சமீபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இயற்கையான பனியால் செய்யப்பட்ட இந்த சிவலிங்கம் சுயம்புவாக உருவான சிவலிங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. அமர்நாத் யாத்திரைஒ பயணம் மிகவும் கடினமானதாக கருதப்படுகிறது. பயணத்தின் சிரமம் கருதி, இங்கு வரும் பக்தர்களுக்கு உடல் நல பரிசோதனை செய்யப்பட்டு, அதன் பின்னரே பயண அனுமதி வழங்கப்படுகிறது. இருப்பினும், அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்கள் சில விஷயங்களை முன்கூட்டியே மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். முழுமையான தயார்நிலையுடன் செல்வதால், பல சிக்கல்களை தவிர்க்கலாம். பயணத்தின் போது என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க | பத்ரி கேதார் செல்ல நல்ல வாய்ப்பு... IRCTC சார்தாம் யாத்திரை பேக்கேஜ் விபரம்..!!
அமர்நாத் குகையானது மலைகள் நிறைந்த மற்றும் மிக கடினமான பாதைகளை கொண்ட இடத்தில் அமைந்துள்ளது, அங்கு நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் நேரடி செல்ல முடியாது. முதலில் ஜம்முவை அடைந்து, பின் அங்கிருந்து பனி லிங்கத்தை தரிசிக்க செல்ல வேண்டும். ரயில் மற்றும் பேருந்து மூலம் ஜம்முவை அடையலாம். நீங்கள் ரயிலில் பயணம் செய்தால், உதம்பூர் ரயில் நிலையத்தை அடையலாம். மேலும் சாலை வழியாக ஸ்ரீநகரை அடையலாம். ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு விமான நிலையங்களை விமானம் மூலம் அடையலாம். இப்போது முன்னோக்கி பயணம் பஹல்காம் அல்லது பால்டலில் இருந்து தொடங்குகிறது. பஹல்காம் ஸ்ரீநகரில் இருந்து 92 கிமீ தொலைவில் உள்ளது, பால்டால் 93 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
அமர்நாத் யாத்திரையின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை
கடற்கரையில் இருந்து 3888 அடி உயரத்தில் குகை இருப்பதால் இங்கு வானிலை மோசமாக இருக்கும். குறைந்த காற்றழுத்தம் மற்றும் குளிர் காரணமாக பிரச்சனைகள் ஏற்படலாம்.
இதற்காக பயணிகள் தினமும் 5 முதல் 7 கி.மீ., தூரம் நடந்து செல்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
பயணத்தின் போது செரிமானத்திற்கு இலகுவான உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லுங்கள். பயணத்தின் போது இலகுவான மற்றும் ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்.
மலைப்பாங்கான பகுதிகளில் அடிக்கடி வானிலை மாற்றங்கள் ஏற்படுவதால், லேசான ஆடைகளுடன் சில கம்பளி ஆடைகளையும் எடுத்துச் செல்ல மறக்காதீர்கள்.
தேவையான ஆவணங்கள்
அமர்நாத் யாத்திரையின் போது, அடையாள அட்டை, பெயர், முகவரி மற்றும் பயணத் தோழரின் எண் போன்ற முக்கியமான ஆவணங்களை சீட்டில் எழுதி வைத்துக் கொள்ளவும். முக்கிய ஆவணங்களின் நகல்களையும் வைத்துக் கொள்ளுங்கள்.
மருத்துவ தொகுப்பு
பையில் ஒரு சிறிய முதலுதவி பெட்டியை எடுத்து செல்லவும், அதில் சில அத்தியாவசிய மருந்துகளை வைக்கவும். பயணத்தின் போது ஆக்ஸிஜன் பற்றாக்குறையை சமாளிக்க, நீங்கள் மருந்து மற்றும் உடனடி ஆக்ஸிஜன் ஸ்ப்ரேயை எடுத்துச் செல்லலாம். உடல்வலி, அசைவு, சளி, இருமல் போன்றவற்றுக்கான மருந்துகளை எடுத்து செல்ல வேண்டும்.
மேலும் படிக்க | வெளிநாடு டூர் இனி எளிது தான்... IRCTC வழங்கும் சில வெளிநாட்டு பேக்கேஜ்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ