Unlock 4 Latest News: கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டதிலிருந்து நாடு தற்போது மூன்றாம் கட்ட அன்லாக் (Unlock -3) நிலையில் உள்ளது. அதேநேரத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பல கட்டுப்பாடுகள் இன்னும் உள்ளன. அடுத்த மாதம் முதல் நான்காம் கட்ட கட்டுப்பாடுகள் செயல்படுத்தப்பட உள்ளன. அதில் செப்டம்பர் 1 முதல் பள்ளியை அரசாங்கம் மீண்டும் திறக்கும் என்று பெரும்பாலான மக்கள் நம்புகின்றனர். கடந்த ஆறு மாதங்களில், கொரோனா வைரஸ் காரணமாக, பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. அன்லாக் 4 கட்டத்தில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பள்ளி கல்லூரிகள் மீண்டும் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளி (School) கல்லூரியுடன் சேர்த்து கொரோனா வைரஸ் காரணமாக ரயில் சேவைகளும் முழுமையாக இயக்கப்படவில்லை. நாட்டின் சில நகரங்களில் மட்டும் ரயில் சேவைகள் இன்னும் இயங்கி வருகின்றன. டெல்லியின் மெட்ரோ ரயில் (Metro Train) குறித்து இன்னும் சந்தேகம் உள்ளது. அன்லாக் 4-ல் எந்த சேவைகள் தளர்வு செய்யப்படும், எவை தொடர்ந்து தடைசெய்யப்படும் என்பது குறித்து மத்திய அரசாங்கத்தால் தெளிவான தகவல்கள் எதுவும் இன்னும் வழங்கப்படவில்லை. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக மார்ச் மாதத்தில் மெட்ரோ சேவைகள் நிறுத்தப்பட்டன.
ALSO READ | Unlock 4: மெட்ரோ ரயில், சினிமா அரங்குகள், பள்ளிகள் நிலை என்ன..!!
செப்டம்பர் 1 முதல் துவங்கும் "அன்லாக் 4" (Unlock 4) கட்டத்தில் மெட்ரோ ரயில் சேவைகளை இயக்க அரசாங்கம் அனுமதிக்க வாய்ப்புள்ளது, ஆனால் தற்போதைக்கு பள்ளிகளும் கல்லூரிகளும் திறக்கப்பட வாய்ப்பில்லை.
செப்டம்பர் 1 க்குப் பிறகு பள்ளி மற்றும் ரயில் சேவையில் பல பெரிய மாற்றங்களைக் காணலாம். அன்லாக் 4.0 உடன், பார் ஆபரேட்டர்கள் தங்கள் கவுண்டர்களில் மதுபானங்களை (Alcohol) விற்க அனுமதிக்கலாம். ஆனால் வாடிக்கையாளர்கள் அதை வீட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படும். அதாவது அங்கேயே உட்கார்ந்து மது அருந்துவது முற்றிலும் தடைசெய்யப்படும்.
நமக்கு கிடைத்த ஆதாரங்கள் படி, பள்ளிகளும் கல்லூரிகளும் உடனடியாக திறக்கப்படாது. இந்த விஷயத்தில் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் எதிர்காலத்தையும் முற்றிலும் பாதிக்கும் என்பதால் அரசாங்கம் இந்த விஷயத்தில் எந்த அவசரமும் பட விரும்பவில்லை. பல்கலைக்கழகங்கள், ஐ.ஐ.டி (IIT) மற்றும் ஐ.ஐ.எம் (IIM) போன்ற உயர் கல்வி நிறுவனங்களை திறக்க அனுமதிக்க வேண்டுமா என்பது குறித்து தீவிர விவாதம் நடைபெற்று வருகிறது.
ALSO READ | அடுத்த மாதம் திறக்கக்கூடும் திரையரங்குகள்: கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படும்!!
நாடு முழுவதும் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு கண்டிப்பாக இருக்கும். தற்போது, மெட்ரோ ரயில் சேவைகள், சினிமாக்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு இடங்கள், தியேட்டர்கள், பார்கள், ஆடிட்டோரியங்கள் மற்றும் இதுபோன்ற சில இடங்கள் தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகளின் கீழ் உள்ளன.
இதில் சில அமைப்புகளுக்கு தால்ர்வு அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது. Unlock 4 வழிகாட்டுதல்களை இந்த வார இறுதிக்குள் வெளியிடப்படலாம்.