மத்திய அமைச்சர் நிதின் கட்கரி (Nitin Gadkari) கொரோனா வைரஸ் COVID-19 பரிசோதனையில் தான் நேர்மறையாக பரிசோதிக்கப்பட்டுள்ளதாக புதன்கிழமையன்று கூறினார். மேலும் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சரான நிதின் கட்கரி, தனது தொடர்புக்கு வந்த அனைவரையும் தேவையான நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டார்.
மைக்ரோ-பிளாக்கிங் தளமான ட்விட்டரில் கட்கரி, செப்டம்பர் 15 ஆம் தேதி தான் பலவீனமாக இருப்பதாகவும் ஒரு மருத்துவரை அணுகியுள்ளதாகவும் கூறினார். சோதனையின் போது, அவரது COVID-19 முடிவுகள் நேர்மறையாக வந்தன. எனினும், தான் இப்போது நன்றாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
கட்கரியின் மற்ற அமைச்சர் சகாக்களான அமித் ஷா (Amit Shah), ஸ்ரீபாத் நாயக், தர்மேந்திர பிரதான், கைலாஷ் சவுத்ரி, அர்ஜுன் ராம் மேக்வால், கஜேந்திர சேகாவத் மற்றும் சுரேஷ் அங்காடி ஆகியோரும் சமீபத்தில் COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
சமீபத்தில் COVID -19 –க்கு நேர்மறையாக பரிசோதித்த முக்கிய அரசியல்வாதிகளில் கர்நாடக முதலமைச்சர் பி எஸ் எடியுரப்பா, மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், மற்றும் தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித் (Banwarilal Purohit) ஆகியோர் அடங்குவர். மகாராஷ்டிரா அமைச்சர்கள் அசோக் சவான், தனஞ்சய் முண்டே ஆகியோரது பரிசோதனை முடிவுகளும் தொற்றுக்கு நேர்மறையாக வந்தன.
ALSO READ: உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க ரஷ்யா ஒப்பந்தம்
செப்டம்பர் 14 அன்று, நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியபோது, மொத்தம் 23 எம்.பி.க்களின் COVID -19 பரிசோதனை முடிவுகள் நேர்மறையாக வந்தன. மழைக்கால கூட்டத்தொடர் செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 1 வரை திட்டமிடப்பட்டுள்ளது. BJP மற்றும் காங்கிரஸைச் சேர்ந்த தலா இரண்டு எம்.பி.க்கள் மற்றும் RJD மற்றும் TMC-யிலிருந்து தலா ஒரு எம்.பி என ஆறு மாநிலங்களவை எம்.பி.க்களின் சோதனை முடிவுகள் நேர்மறையாக வந்தன.
மீனாட்சி லேகி, அனந்த் குமார் ஹெக்டே மற்றும் பர்வேஷ் சாஹிப் சிங் உள்ளிட்ட 17 மக்களவை எம்.பி.க்கள் COVID-19 க்கு நேர்மறையாக சோதிக்கப்பட்டுள்ளனர். COVID-19 -க்கு நேர்மறையாகக் கண்டறியப்பட்ட மற்ற எம்.பி.க்கள் சுக்பீர் சிங், ஹனுமான் பெனிவால், சுகனாதா மஜும்தார், கோடெத்தி மாதவி, பிரதாப் ராவ் ஜாதவ், ஜனார்தன் சிங், பித்யுத் பரன், பிரதான் பாருவா, என் ரெட்டெப்பா, செல்வம் ஜி, பிரதாப் ராவ் பாட்டில், ராம் ஷாங்கர் கதேரியா, சத்ய பால் சிங் மற்றும் ரோட்மல் நாகர். இதில் அதிகபட்சமாக 12 பாஜக எம்.பி.-க்கள் உள்ளனர். YRS காங்கிரசின் இரண்டு எம்.பி.க்களும் சிவசேனா, திமுக மற்றும் RLP-யின் தலா ஒரு எம்.பி.-யும் உள்ளனர்.
ALSO READ: உலகின் முதல் COVID-19 தடுப்பூசி: 40,000 பேர் மீது இறுதிக்கட்ட சோதனை செய்யும் ரஷ்யா
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR
Apple Link - https://apple.co/3loQYeR