மொபைல் போன்கள் மற்றும் உதிரிபாகங்களின் இறக்குமதி மீதான சுங்க வரி 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.
உள்நாட்டு மொபைல் போன் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க மத்திய அரசு முடிவு செய்ததுள்ளது. இறக்குமதி செய்யப்படும் மொபைல் போன்களுக்கு 15 சதவீதமாக இருந்த சுங்க வரி 20 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட் ஃபோன்களின் விலை கடிமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்தி வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் இறக்குமதி சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது என தி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.