சபரிமலைக்கு சென்ற 2 பெண்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தம்......

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபட சென்ற 2 பெண்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தினர்; நீலமலையில் பக்தர்கள் எதிர்ப்பால் கண்ணூரை சேர்ந்த ரேஷ்மா, ஷானிலா போலீஸ் பாதுகாப்புடன் பம்பை திரும்பினர்

Last Updated : Jan 16, 2019, 09:56 AM IST
சபரிமலைக்கு சென்ற 2 பெண்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தம்...... title=

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபட சென்ற 2 பெண்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தினர்; நீலமலையில் பக்தர்கள் எதிர்ப்பால் கண்ணூரை சேர்ந்த ரேஷ்மா, ஷானிலா போலீஸ் பாதுகாப்புடன் பம்பை திரும்பினர்

பக்தர்களின் எதிர்ப்பை மீறி,  கனகா துர்கா, பிந்து ஆகிய இரு பெண்கள் சபரிமலை சன்னிதானத்துக்குள் செல்ல முயன்றதால், இம்மாத தொடக்கத்தில் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்தை கண்டித்து அங்கு மாநிலம் தழுவிய முழு கடையடைப்பு போராட்டமும் நடைபெற்றது.
 
அந்த பதற்றம் சற்று அடங்கிய நிலையில்,கேரள மாநிலம் கண்ணனூரைச் சேர்ந்த ரேஷ்மா, ஷானிலா ஆகிய இரு பெணகள் இன்று மீண்டும் இரண்டு பெண்கள் சபரிமலைக்கு செல்ல  முயன்றதால் அங்கு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், பக்தர்கள் அவர்களை நீலக்கல்லில் தடுத்தி நிறுத்தினர். பக்தர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி அவர்கள் சபரிமலைக்கு செல்ல முயன்றதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு விரைந்த போலீஸார், இரு பெண்களையும் பாதுகாப்பாக பம்பைக்கு அழைத்துச் சென்றனர்.

"சபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் செயல்பாடு மிகவும் மோசமாகவும், வெட்கக்கேடாகவும் உள்ளது" என, கொல்லத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியிருந்தார்" என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending News