வினாத்தாள் கசிவு வழக்கு விவகாரத்தில் YSRTP YS ஷர்மிளா தடுப்பு காவலில்! வீடியோ வைரல்

YSRTP YS Sharmila Detained: போலீசாருடன் கைகலப்பில் ஈடுபட்ட ஒய்எஸ்ஆர்டிபி தலைவர் ஒய்எஸ் ஷர்மிளா பெண் கான்ஸ்டபிளை அறைந்தார். இதனையடுத்து  மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 24, 2023, 01:20 PM IST
  • போலீசாருடன் கைகலப்பில் ஈடுபட்ட ஒய்.எஸ் ஷர்மிளா
  • தெலங்கானாவில் கேள்வித்தாள் கசிவு விவகாரம்
  • விஸ்வரூபம் எடுக்கும் வினாத்தாள் கசிவு வழக்கு
வினாத்தாள் கசிவு வழக்கு விவகாரத்தில் YSRTP YS ஷர்மிளா தடுப்பு காவலில்! வீடியோ வைரல் title=

ஹைதராபாத்: யுவஜன ஸ்ராமிகா ரைத்து தெலுங்கானா கட்சி (YSRTP) தலைவர் ஒய்.எஸ்.சர்மிளாவை தெலுங்கானா போலீசார் கைது செய்து உள்ளூர் காவல் நிலையத்திற்கு மாற்றினனார்கள். தெலுங்கானா மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Telangana State Public Service Commission (TSPSC) வினாத்தாள் கசிவு வழக்கு தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழுவின் (Special Investigation Team (SIT)) அலுவலகத்திற்குச் சென்றதாக காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து போலீசார் அங்கு சென்றனர்.

அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில், ஒய் எஸ் ஷர்மிளா எஸ்ஐ & பெண் கான்ஸ்டபிளை அறைந்தார். இதனையடுத்து ஒய்எஸ்ஆர்டிபி தலைவர் ஒய்எஸ் ஷர்மிளா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். 

கேள்வித்தாள் கசிவு தொடர்பாக மேலும் இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதை அடுத்து இந்த முன்னேற்றம் நடந்துள்ளது. மகபூப்நகரைச் சேர்ந்த மிபய்யா மற்றும் அவரது மகன் ஜனார்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர், இதையடுத்து, இந்த விவகாரத்தில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

ஒய்.எஸ்.சர்மிளா, எஸ்ஐடி அலுவலகத்திற்குச் செல்வதைத் தடுத்த காவலர்களுடன் அவர் சண்டையில் ஈடுபட்ட வீடியோவை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் பகிர்ந்துள்ளது.

TSPSC ஊழல் மார்ச் 12 அன்று வெளிச்சத்திற்கு வந்தது. அதையடுத்து, குரூப் 1 முதல்நிலை தேர்வு, உதவி பொறியாளர்கள், AEE மற்றும் DAO தேர்வுகளை ரத்து செய்தது தவிர குற்றம் சாட்டப்பட்ட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான லவ்த்யாவத் தாக்யாவிடம், உதவி பொறியாளர்கள் ஆட்சேர்ப்புக்காக டிஎஸ்பிஎஸ்சி நடத்திய தேர்வின் வினாத்தாளுக்காக மிபய்யா ரூ.2 லட்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஜனார்தன் பரீட்சையில் தோற்றியிருந்தார்.

மேலும் படிக்க | WFI தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக தொடரும் மல்யுத்த வீரர்கள் போராட்டம்

டிஎஸ்பிஎஸ்சியில் பணிபுரியும் பிரதான குற்றவாளியான பிரவீன் குமாரிடம் இருந்து வினாத்தாள்களை பெற்ற ரேணுகா என்ற ஆசிரியரின் கணவர் டாக்யா. AE தேர்வில் கலந்து கொண்ட தன் சகோதரர் ராஜேஷ்வர் நாயக்கிற்கு வினாத்தாளை வாங்கிக் கொடுத்தாள். அவள் டாக்யாவுடன் சேர்ந்து வினாத்தாள்களை மற்றவர்களுக்கு விற்றார்.

இந்த வழக்கில் மார்ச் 13 முதல் 17 குற்றவாளிகளை கைது செய்துள்ளதாக தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் எஸ்ஐடி கடந்த வாரம் தெரிவித்திருந்தது. மேலும் நியூசிலாந்தில் இருந்து மற்றொரு குற்றவாளியை கைது செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தெலுங்கானாவில் லட்சக்கணக்கான வேலையில்லாதோர் பாதிக்கப்பட்டதற்கு பிஆர்எஸ் அரசுதான் காரணம் என எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக குற்றம்சாட்டியதால், தேர்வுத்தாள் கசிவு விவகாரம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க | அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்? அவரு தாங்க முடிவு பண்ணணும் - செல்லு ராஜூ

டிஎஸ்பிஎஸ் தலைவர் ஜனார்தன் ரெட்டி, செயலாளர் அனிதா ராம்சந்திரன் மற்றும் உறுப்பினர் பி.லிங்கா ரெட்டி ஆகியோரிடமும் எஸ்ஐடி விசாரணை நடத்தியது.

அமலாக்க இயக்குனரகமும் (ED) இந்த வழக்கில் பணமோசடி குற்றச்சாட்டுகளை விசாரித்து வருகிறது. இந்த வார தொடக்கத்தில், பிரவீன் குமார் மற்றும் ராஜசேகர் ரெட்டியிடம் விசாரணை நடத்தப்பட்டது.

TSPSC இன் ரகசிய பிரிவு அறையின் பொறுப்பாளர் சங்கர லட்சுமியிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் ED அதிகாரிகள் குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் விசாரித்தனர்

மேலும் படிக்க | காவல்துறையின் அவலம்: புகார் கொடுக்க சென்ற பெண்ணை அடித்து துன்புறுத்திய பெண் காவலர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News