கங்கையில் நீராடினால் சரியாகிடும்.. மூடநம்பிக்கையால் 5 வயது அப்பாவி சிறுவன் பலி

5-Year-Old Boy In Haridwar: மூடநம்பிக்கையால் உயிர் பலி. சிறுவனின் மரணத்துக்கு காரணம் நீரில் மூழ்கடிக்கப்பட்டது இல்லை என பிரேத பரிசோதனை முடிவு சொல்கிறது. சிறுவன் ஏற்கெனவே இறந்திருந்தாரா, குளிர்தாங்காமல் இறந்தாரா என்ற கோணத்தில் விசாரிக்கிறோம் என மாவட்ட காவல்துறை கூறியுள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Jan 25, 2024, 02:43 PM IST
கங்கையில் நீராடினால் சரியாகிடும்.. மூடநம்பிக்கையால் 5 வயது அப்பாவி சிறுவன் பலி title=

Uttarakhand News In Tamil: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில், அதிசய சிகிச்சை என்ற மூட நம்பிக்கையால் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரத்தப் புற்றுநோயுடன் போராடிக் கொண்டிருந்த சிறுவனை, கங்கையின் புனித நீரில் குளிப்பாட்டினால் நோய் சரியாகிவிடும் என்ற மூடநம்பிக்கையில், டெல்லியில் இருந்து ஹரித்வாருக்கு சிறுவனை பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த கொடூர சம்பவம் நேற்று (ஜனவரி 24) மதியம் நடந்துள்ளது. தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சிறுவனை மீட்டு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் குழு அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். 

குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால், டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் குழந்தையை காப்பாற்றுவது கடினம் எனக் கூறியதாகத் தெரிகிறது. அதன்பிறகு, குழந்தையை கங்கை நீரில் குளிப்பாட்டினால், உடல்நிலை சரியாகிவிடும் என்ற மூடநம்பிக்கையில், ஹரித்வார் அழைத்து சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வீடியோ வெளியாகி உள்ளது. கங்கை ஆற்றில் குழந்தையை மூழ்கடித்து, பெற்றோர் பிரார்த்தனை செய்துள்ளனர். நீருக்கடியில் நீண்ட நேரம் குழந்தையை மூழ்கியே வைத்துள்ளனர். இதனைக்கண்டடு ஆச்சரியமடைந்த அக்கம் பக்கத்தினர் தலையிட்டு வலுக்கட்டாயமாக குழந்தையை வெளியே எடுத்துள்ளனர். இதனால் கோபமடைந்த குழந்தையின் அத்தை,  சிறுவனைக் காப்பாற்றியவர்களைத் தாக்க முயன்றார். சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். குழந்தை இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

மேலும் படிக்க - பெண் சிசுவை சாலையோரம் வீசிச் சென்ற தாய்

இந்தசம்பவம் குறித்த மற்றொரு வீடியோவில், குழந்தையின் அத்தை, உயிரற்ற உடலின் அருகில் அமர்ந்து, குழந்தை மீண்டும் உயிர்பெறும் என்று அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்தி பிராத்தனை செய்துள்ளார்.

அவர்களை டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாருக்கு அழைத்து வந்த டிரைவரிடம் கேட்டபோது, "எனது வாகனத்தில் வந்து அமரும் போது, குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறினார். குழந்தையை சுற்றி போர்வை போர்த்தப்பட்டிருந்தது. ஹரித்துவாருக்கு சென்றடைவதற்குள் குழந்தையின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. வாகனத்தில் அமைந்திருக்கும் போது குழந்தையை கங்கையில் குளிப்பாட்டுவது குறித்தும், அவருக்கு சிகிச்சை அளித்து வருவது குறித்தும் பேசிக்கொண்டனர்" என டிரைவர் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து ஹரித்வார் நகர எஸ்பி ஸ்வதந்த்ர குமார் சிங் கூறுகையில், "கணவன், மனைவி மற்றும் அவரது மற்றொரு உறவினர் குழந்தையை அழைத்து வந்துள்ளனர். முதல் விசாரணையில் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என தெரியவந்துள்ளது. டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தையை காப்பாற்ற முடியாது எனக் கூறியதாகத் குடும்பத்தினர் கூறியுள்ளனர்" என ஹரித்வார் நகர எஸ்பி தெரிவித்தார்.

மேலும் படிக்க - குழந்தைக்கு தந்தை யார் ? 3 பேரை காதலித்த பட்டதாரி தூத்துக்குடி பெண்ணின் அவல நிலை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News