புதுடெல்லி: டெல்லி சட்டசபை துணை சபாநாயகர் ராக்கி பிர்லாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏக்கள் 3 பேர் பாதுகாவலர்கள் உதவியுடன் இன்று (வியாழக்கிழமை) வெளியேற்றப்பட்டனர். நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு முன் கவன ஈர்ப்பு நோட்டீசை மீது விவாதம் நடந்த வேண்டும் என்ற அவரது கோரிக்கையை ராக்கி பிர்லா ஏற்காததால், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக மூன்று பாஜக எம்எல்ஏக்கள் பாதுகாவலர்கள் உதவியுடன் வெளியேற்றப்பட்டதால், அக்கட்சியின் மீதமுள்ள எம்எல்ஏக்களும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தேசிய தலைநகரம் டெல்லியில் ஆளும் கட்சியை கவிழ்க்க பாஜகவின் "ஆபரேஷன் தாமரை" தோல்வி அடைந்தது விட்டது என்பதைக் காட்டுவதற்காக ஆம் ஆத்மி அரசு திங்கள்கிழமை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும் வரை கவன ஈர்ப்பு நோட்டீஸ் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்று சட்டசபை துணை சபாநாயகர் பிர்லா கூறினார்.
இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் ராம்வீர் சிங் பிதுரி எதிர்ப்புத் தெரிவித்து, சட்டசபையில் விவாதம் செய்ய நிறைய விஷயங்கள் உள்ளன. "டெல்லியில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. உலகின் மிகவும் மாசுபட்ட தலைநகரம் பட்டியலில் டெல்லி இடம் பிடித்துள்ளது, டெல்லியில் சுகாதார பிரச்சினைகள் உட்பட விவாதிக்க மக்கள் சார்ந்த பல பிரச்சனைகள் உள்ளன. அதைவிட்டுவிட்டு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தனது எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது என்பதை நிரூபிக்க எந்தவொரு நாடகமும் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றார்.
மேலும் படிக்க: Delhi MLAs: ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களை காணவில்லை! மாயமான டெல்லி எம்எல்ஏக்கள்
அதற்கு பதில் அளித்த டெல்லி சட்டசபை துணை சபாநாயகர் பிர்லா, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் என்ன நடந்தாலும், எந்த பிரச்சனை இருந்தாலும், "நம்பிக்கையில்லா தீர்மானம்" தான் முக்கியமானது என்று உங்கள் கட்சி தான் நடந்துக்கொள்கிறது என்றார். எனவே நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், எதிர்க்கட்சிகளின் அனைத்துப் பிரச்சினைகளும் முன்னெடுக்கப்படும் என்றார்.
இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒப்புக்கொள்ளாததால், பாஜக எம்எல்ஏக்கள் விஜேந்தர் குப்தா, அபய் வர்மா மற்றும் மோகன் சிங் பிஷ்த் ஆகியோரை சட்டசபையில் இருந்து வெளியேற்றுமாறு பாதுகாவலர்களுக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, மீதமுள்ள பாஜக எம்எல்ஏக்களும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டசபைக்கு வந்ததாகவும், மக்கள் சார்ந்த பிரச்னைகளில் அக்கறை காட்ட வரவில்லை என்றும் பிர்லா கூறினார்..
மேலும் படிக்க: அதிகார போதையில் இருக்கிறீர்கள் : கெஜ்ரிவாலுக்கு அன்னா ஹசாரே எழுதிய கடிதம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ