7 Easy Tips To Make A Good First Impression : ஒருவரை உங்களுக்கு பிடிக்க வைக்க வேண்டும் என்றால், நீங்கள் சில முயற்சிகளை எடுக்க வேண்டியிருக்கிறது. அவை என்னென்ன தெரியுமா?
7 Easy Tips To Make A Good First Impression : நேர்காணலுக்கு செல்லும் போது, முதல் டேட்டிற்கு செல்லும் போது, பெரிய மீட்டிங்கிற்கு செல்லும் போது என பல இடங்களில் நீங்கள் உங்கள் முதல் முத்திரையை முத்தாக பதிப்பது மிகவும் அவசியமாகும். இதை செய்ய, நாம் சில முயற்சிகளை மேற்கொள்வது மிகவும் அவசியம். அவை என்னென்ன தெரியுமா?
கால தாமதம் செய்யக்கூடாது: நேர்காணலாக இருந்தாலும், உங்களுக்கு பிடித்தவரை முதன்முறையாக சந்திப்பதாக இருந்தாலும் காலதாமதம் செய்யாமல் சென்று விட வேண்டும். இது, உங்களுக்கு அவர் மீதிருக்கும் மரியாதையையும் அவர்கள் நேரத்தை வீணடிக்க கூடாது என்று யோசிப்பதையும் காட்டுகிறது.
ஆடை: செல்லும் இடத்திற்கு ஏற்றவாறு உடை உடுத்துவது மிகவும் அவசியம். அது, உங்கள் மீதான நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தும்.
உண்மையாக சிரிக்க வேண்டும்: ஒருவரை முதன் முறையாக பார்க்கும் போது, அவர்கள் ஏதாவது கூறும் போது உண்மையாக சிரிக்க வேண்டும்.
உடல் மொழி: உங்கள் உடல் மொழி, பாசிடிவாக இருக்க வேண்டும். ஒருவரிடம் முதல்முறையாக பேசும் போது கண்ணோடு கண் பார்த்து பேச வேண்டும். கால்களை ஆட்டுவது, கைகளை கட்டிக்கொள்வது போன்ற விஷயங்களை செய்யக்கூடாது.
கேட்பது: பிறர் பேசுகையில் அவர்கள் பேசுவதை காது குடுத்து முழு கவனத்துடன் கேட்க வேண்டும் செல்பேசியை பார்த்துக்கொண்டு, வேறு வேலைகளை பார்த்துக்கொண்டு இருக்க கூடாது.
தெளிவாகவும் தைரியமாகவும் பேச வேண்டும்: நீங்கள் கூற வரும் விஷயத்தை, தெளிவாகவும் தைரியமாகவும் பேச வேண்டியது மிகவும் முக்கியம். அப்போதுதான் உங்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை உருவாகும்.
நேர்மையாக இருக்க வேண்டும்: முதல் சந்திப்பில் நீங்கள் எந்த இடத்திலாவது உண்மையாக இல்லை என்று தெரிந்து விட்டால், உங்கள் மீதான நம்பிக்கை ஒருவருக்கு கெட்டுப்போய் விடும். எனவே அவரை கவர வேண்டும் என்பதற்காக பொய்யாக இருக்க வேண்டாம்.