இது அன்னதானம் அல்ல, ஆக்ஸிஜன் தானம்: மனதை உருக்கும் குருத்வாராவின் தனித்துவமான சேவை

காசியாபாத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில், காசியாபாத்தின் இந்திராபுரத்தில் உள்ள ஒரு குருத்வாரா கோவிட் -19 நோயாளிகளுக்கு உதவ ஒரு தனித்துவமான முயற்சியை முன்வைத்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 23, 2021, 02:13 PM IST
  • நாடு முழுதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக வீசி வருகிறது.
  • ஒரு குருத்வாரா கோவிட் -19 நோயாளிகளுக்கு உதவ ஒரு தனித்துவமான முயற்சியை முன்வைத்துள்ளது.
  • ஆக்சிஜன் தேவைப்படுபவர்களுக்கு இந்த உதவி பெரும் நிவாரணமாக வந்துள்ளது.
இது அன்னதானம் அல்ல, ஆக்ஸிஜன் தானம்: மனதை உருக்கும் குருத்வாராவின் தனித்துவமான சேவை title=

காசியாபாத்: நாடு முழுதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக வீசி வருகிறது. 

காசியாபாத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் (CoronaVirus) தொற்றுக்கு மத்தியில், காசியாபாத்தின் இந்திராபுரத்தில் உள்ள ஒரு குருத்வாரா கோவிட் -19 நோயாளிகளுக்கு உதவ ஒரு தனித்துவமான முயற்சியை முன்வைத்துள்ளது.

குருத்வாராவில் தினமும் 'லங்கர்' எனப்படும் அன்னதானம் வழங்கப்படுவது பொதுவான விஷயமாகும், இந்த கொரோனா காலத்தில் குருத்வாரா நிர்வாகிகள் தற்போது எது தேவையோ அதன் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டு அதற்கான ஏற்பாடுகளை எடுத்துள்ளனர். குருத்வாராவில் 'ஆக்ஸிஜன் லங்கர்' தொடங்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்று காசியாபாத்தில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்காக (Oxygen Cylinders) அலைந்து திரியும் COVID-19 நோயாளிகளுக்கு உதவ இந்த முயற்சி கொண்டு வரப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் கூற்றுப்படி, ஆக்ஸிஜன் பற்றாக்குறைக்கு மத்தியில் நோயாளிகள் அனுபவிக்கும் கஷ்டங்களை சிறிது குறைக்கும் நோக்கத்துடன் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நோயாளிகளுக்கு போதுமான அளவு ஆக்ஸிஜன் சப்ளை செய்ய தங்களால் முடிந்த வரை உதவ தயாராக இருப்பதாக அறிவித்த குருத்வாரா, மக்கள் தொடர்பு கொள்ள 9097041313 என்ற ஹெல்ப்லைன் எண்ணையும் வெளியிடப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் கூற்றுப்படி, குருத்வாராவுக்கு ஹெல்ப்லைன் எண்ணில் அழைப்பு வந்தவுடன், குருத்வாராவிலிருந்து ஒரு கார் நோயாளி இருக்குமிடத்துக்கு அனுப்பப்படுகிறது. நோயாளி அழைத்து வரப்பட்டு, அவருக்கு மருத்துவமனையில் படுக்கை கிடைக்கும்வரை, அவர்களுக்கு குருத்வாரா மூலம் ஆக்ஸிஜன் வழங்கப்படுகிறது.

யாருடைய வீட்டிற்கும் ஆக்ஸிஜன் அனுப்பப்படுவதில்லை என்றும் நோயாளிகள் அழைத்துவரப்ப்பட்டு அவர்களுக்கு ஆக்ஸிஜன் வழங்கப்படுகிறது என்றும் குருத்வாரா தெளிவுபடுத்தியது. 

ALSO READ: காரை விற்று ஆக்ஸிஜன் தானம் செய்யும் கொடைவள்ளல்: 'ஆக்ஸிஜன் மேன்' ஷாஹனவாஸ்!!

பல முன்னணி மருத்துவமனைகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள இந்த நெருக்கடியான சூழ்நிலைக்கு மத்தியில், குருத்வாராவின் இந்த முயற்சி பாராட்டத்தக்கதாக உள்ளது. குருத்வாராவின் இந்த நடவடிக்கையால் பலருக்கு உடனடியாக நிவாரணம் கிடைக்கிறது. ஆக்ஸிஜன் பெறுவதற்கு ஏராளமான மக்கள் இந்திராபுரம் குருத்வாராவில் திரண்டு வருகின்றனர்.

உத்தரபிரதேசத்தில் COVID-19 நிலவரம் 

COVID-19 தொற்றுநோயின் இரண்டாவது அலை உத்தரபிரதேசத்தில் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 34379 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இது இதுவரையிலான மிக அதிக ஒற்றை நாள் பதிவாகும். 

195 பேர் இந்த கொடிய தொற்று வைரஸால் உயிர் இழந்தனர். காசியாபாத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக சுமார் 1,000 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். ஹாட்ஸ்பாட்டாக இருக்கும் லக்னோவில் 5,000 க்கும் மேற்பட்டோர் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

ALSO READ: கடன் வாங்குவீர்களோ, பிச்சை எடுப்பீர்களோ, நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்க வேண்டும்: HC காட்டம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News