மகாராஷ்டிராவுக்கு பாஜக துரோகம் இழைத்து விட்டது -சிவசேனா!

பாஜக MP அனந்த்குமார் ஹெக்டேவின் அறிக்கைக்குப் பிறகு, மகாராஷ்டிராவின் அரசியலில் பூகம்பம் ஏற்பட்டுள்ளது...

Last Updated : Dec 2, 2019, 02:55 PM IST
மகாராஷ்டிராவுக்கு பாஜக துரோகம் இழைத்து விட்டது -சிவசேனா! title=

பாஜக MP அனந்த்குமார் ஹெக்டேவின் அறிக்கைக்குப் பிறகு, மகாராஷ்டிராவின் அரசியலில் பூகம்பம் ஏற்பட்டுள்ளது...

மத்திய அரசின் 40 ஆயிரம் கோடி ரூபாயை துஷ்பிரயோகத்திலிருந்து காப்பாற்றுவதற்காக பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றதாக ஹெக்டே கூறியிருந்த நிலையில், ரூ. 40000 கோடியை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்புவது மகாராஷ்டிராவுக்கு இழைக்கப்பட்ட துரோகம் என்று சிவசேனா தெரிவித்துள்ளது.  
 
இந்நிலையில் தற்போது இந்த விஷயத்தில சிவசேனா MP சஞ்சய் ரவுத் பட்னாவிஸைத் தாக்கியுள்ளார். இதுகுறித்து ரவுத் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது., 'மத்திய அரசின் 40000 கோடியினை பாதுகாக்க பட்னாவிஸ் 80 மணி நேர முதல்வராக இருந்ததாக பாஜக MP அனந்த்குமார் தெரிவித்துள்ளார். இது மகாராஷ்டிராவின் சொத்து, இதனை மத்திய அரசுக்கு அனுப்பியது மகாராஷ்டிராவுக்கு இழைக்கப்பட்ட துரோகம்" என தெரிவித்துள்ளார்.

மறுபுறம், பட்னாவிஸ் ஹெக்டேவின் அறிக்கை தவறானது என்று கூறியுள்ளார். மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் பட்னாவிஸ், 'இந்த அறிக்கை தவறானது, நான் அதை நிராகரிக்கிறேன், புல்லட் ரயிலில் மகாராஷ்டிரா அரசாங்கத்தின் பங்கு மையத்தின் உதவியுடன் தயாரிக்கப்படுகிறது.

மகாராஷ்டிராவிலிருந்து மத்திய அரசு எந்தப் பணத்தையும் கேட்கவில்லை, மகாராஷ்டிரா மத்திய அரசுக்கு எந்தப் பணத்தையும் கொடுக்கவில்லை என்று மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் பட்னாவிஸ் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், தான் முதல்வராக பதவியேற்ற போதோ அல்லது பொறுப்பு முதல்வராக இருந்த போதோ அத்தகைய எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அரசாங்கத்தின் நிதித்துறை விசாரித்து அதன் உண்மையை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Trending News