புதுடெல்லி: போலி கணக்குகள் மூலம், போலி செய்திகள் பரப்பப்படுகின்றன. போலி செய்திகள் மூலம் இந்தியாவுக்கு எதிரான செய்திகளை பரப்பும் உள்ளடக்கம் மற்றும் விளம்பரங்களை கண்காணிக்க வேண்டும் என்றும், ஒழுங்குமுறைபடுத்துவதற்கான ஒரு வழிமுறையை ஏற்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு மற்றும் ட்விட்டர் இந்தியாவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வினித் கோயங்கா என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே மற்றும் நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா மற்றும் வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 12, 2021) மத்திய அரசு மற்றும் ட்விட்டர் கம்யூனிகேஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
புகழ்பெற்ற நபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் பெயரில் நூற்றுக்கணக்கான போலி ட்விட்டர் கணக்குகள் மற்றும் போலி பேஸ்புக் (Facebook) கணக்குகள் இருக்கின்றன என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான ட்வீட்களை பதிவு செய்து வன்முறையை தூண்டியதாக, குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், ட்விட்டர் மற்றும் இந்தியாவில் உள்ள அவர்களின் பிரதிநிதிகள் மீது நடவடிக்கை எடுக்க வகை செய்யும் ஒரு சட்டத்தை உருவாக்குமாறு இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
"இந்த போலி ட்விட்டர் (Twitter) கணக்குகள் மற்றும் பேஸ்புக் கணக்குகள் அரசியலமைப்பு அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் புகைப்படத்தைப் பயன்படுத்துகின்றன. எனவே, இது போன்ற ட்விட்டர் கணக்குகள் மற்றும் பேஸ்புக் பதிவுகள் மூலம் பரப்பப்படும் செய்திகளை சாமானிய மக்கள் நம்புகின்றனர்" என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
"தற்போது இந்தியாவில் (India) மொத்த ட்விட்டர் கணக்குகளின் எண்ணிக்கை சுமார் 3.5 கோடி, பேஸ்புக் கணக்குகளின் எண்ணிக்கை 350 கோடியாகவும் உள்ள நிலையில், 10 சதவீத ட்விட்டர் கணக்குகள் (35 லட்சம்) மற்றும் 10 சதவீத பேஸ்புக் கணக்குகள் 35 கோடியாகவும்) போலி ஐடிக்கள் "என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், அரசியல் கட்சிகள் இந்த போலி சமூக ஊடகக் கணக்குகளை சுய விளம்பரத்திற்காகப் பயன்படுத்துவதாகவும், குறிப்பாக தேர்தல்களின் போது எதிரிகள் மற்றும் போட்டி வேட்பாளர்களின் பெயரை, மதிப்பை வகையில் போலி செய்திகளை பரப்ப இந்த கணக்குகள் உபயோகப்படுத்தப்படுவதாகவும் மனுவில் சமர்ப்பிக்கப்பட்டது.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR