காதலியுடன் சுற்றுலா செல்ல ஆசைப்பட்டு இறுதியாக சிறைக்கு சென்ற காதலன் !

சுற்றுலா செல்ல திட்டமிட்டு போதிய பணம் இல்லாததால் திருட்டில் ஈடுபட்டடோர் பிடிபட்டனர்  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 3, 2021, 10:40 PM IST
காதலியுடன் சுற்றுலா செல்ல ஆசைப்பட்டு இறுதியாக சிறைக்கு சென்ற காதலன் ! title=

காதலிக்கும் பெண்ணுக்கு, காதலர்கள் பரிசு பொருட்கள் கொடுத்து அசத்துவது வழக்கமான ஒன்று.  ஆனால் இங்கு ஒரு காதலன், தனது காதலிக்கு விலையுயர்ந்த பொருளை பரிசாக கொடுக்க ஆசைப்பட்டு, சிறைக்கு சென்று கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்.  நியூ ரோஷன்பூர் பகுதியில் உள்ள நஜாப்நகர் பகுதியை சேர்ந்தவர் அஜய்.  இவர் நீண்ட நாட்களாக ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.  இந்நிலையில் அந்த பெண்ணை அழைத்துக்கொண்டு மலை பிரேதேசத்திற்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டார்.  ஆனால் அவருடன் சுற்றுலா செல்ல போதிய பணம் இல்லை.

ALSO READ பசுவின் வயிற்றிலிருந்து 77 கிலோ பிளாஸ்டிக்கை நீக்கிய மருத்துவர்கள்!

இதனையடுத்து தருமபுராவை சேர்ந்த கபில் சர்மா என்கிற நண்பருடன் இணைந்து திருட்டு வேளையில் ஈடுபட்ட சம்பவம் அம்பலமாகியுள்ளது.  இவர்கள் இருவரும் சில நாட்களுக்கு முன்னர் துவாரகா நகரில் உள்ள பூங்கா ஒன்றில் சோமவீர் என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த விலையுயர்ந்த ஐபோனை பறித்துள்ளனர்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து, இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வந்தனர்.  இந்த திருட்டை தொடர்ந்து மேலும் இவர்கள் மற்றொரு இடத்தில திருடும்பொழுது போலீசார் இவர்களை கையும் களவுமாக பிடித்து அவரிடம் இருந்த ஐபோன் மற்றும் பணத்தை  மீட்டனர்.

அதனை தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், அஜய் தனது காதலியை மலை பிரேதசத்திற்கு சுற்றுலாவிற்கு கூட்டி சென்று, தனது காதலிக்கு விலையுயர்ந்த பரிசை அளிக்க விரும்பினான்.  ஆனால் அவ்வாறு சர்ப்ரைஸ் செய்வதற்கு போதிய பணம் இல்லாததால், நண்பனின் உதவியோடு  இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

ALSO READ 14 வயது காதலனுடன் ஓடிய 6 குழந்தைகளின் தாய்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News