மசூத் அசாருக்கு தடை விதிக்க 9 மாதம் கால அவகாசம்: ஐ.நா.,வுக்கு இந்தியா கண்டனம்

Last Updated : Nov 8, 2016, 01:00 PM IST
மசூத் அசாருக்கு தடை விதிக்க 9 மாதம் கால அவகாசம்: ஐ.நா.,வுக்கு இந்தியா கண்டனம் title=

பயங்கரவாதி மசூத் அசாருக்கு தடை விதிக்க ஐ.நா காலதாமதம் செய்வதற்கு இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி மசூத் அசாருக்கு தடை விதிக்க வேண்டும் என இந்தியா ஐ.நா -வை வலியுறுத்தியது. ஆனால், மசூத் அசாருக்கு தடை விதிக்க சீனா முட்டுக்கட்டை போட்டது. இதற்கு சில விதிமுறைகளை காரணம் கூறியது. இதற்கான காலக்கெடு, செப்டம்பர் மாதத்துடன் முடிந்த நிலையில், சீனா மேலும் 3 மாதம் காலக்கெடு கோரியுள்ளது. இந்தியாவின் முயற்சிக்கு தடை விதிக்கும் வகையில் சீனா செயல்படுகிறது.

ஐ.நா., பாதுகாப்பு சபையில் இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் சையத் அக்பரூதீன் இதைக்குறித்து கூறியதாவது:- பயங்கரவாதத்திற்கு எதிரான நமது முயற்சிகளை பயங்கரவாதிகள் சீரழிக்கின்றனர். பயங்கரவாத பட்டியலில் சேர்க்கப்பட்ட பயங்கரவாதிகளுக்கு தடை விதிப்பது குறித்து பரிசீலனை செய்ய, ஐ.நா., 9 மாதம் கால அவகாசம் வழங்குகிறது. இவ்வளவு கால அவகாசம் தேவையில்லை. இதனால் சர்வதேச சமூகம் பல முக்கிய பிரச்னைகளில் விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. தற்போதுள்ள சர்வதேச சூழ்நிலைகளுக்கு ஏற்ப பாதுகாப்பு சபையை விரிவாக்கம் செய்ய வேண்டும்.

Trending News