7 December 2018, 03:00 PM
தெலுங்கானாவில் சட்டப்பேரவை தேர்தல்: மாலை 03:00 மணி நிலவரப்படி 59.43 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது!
7 December 2018, 1:00 PM
தெலுங்கானாவில் சட்டப்பேரவை தேர்தல்: பிற்பகல் 1:00 மணி நிலவரப்படி 49.15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது!
7 December 2018, 08:53 AM
தெலுங்கானாவில் சட்டப்பேரவை தேர்தல்: காலை 9.00 மணி நிலவரப்படி 8.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது!
தெலுங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கியது. மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.....
தெலுங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. ஏற்கனவே மூன்று மாநிலங்களில் தேர்தல் முடிந்து விட்ட நிலையில் இந்த 5 மாநில தேர்தலின் முடிவும் வரும் மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதப்படுகிறது.
தெலுங்கானாவில் 119 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சுமார் இரண்டு கோடியே எண்பது லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். இதற்காக மாநிலத்தில் 32 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்புக்காக ஒன்றரை லட்சம் போலீசாரும் துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். தனி மாநிலமாக தெலுங்கானா அமைக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முழு அளவிலான தேர்தல் இது..
Telangana: State Irrigation Minister T Harish Rao casts his vote in polling booth no. 102 in Siddipet constituency. #TelanganaElections2018 pic.twitter.com/2q2tqbgoXl
— ANI (@ANI) December 7, 2018
காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி மாலை 5 மணிவரை நடைபெறுகிறது. நக்சலைட் ஆதிக்கம் உடைய 13 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதிக்கு பெரும் சவாலாக காங்கிரசும் தெலுங்கு தேசமும் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கின்றன.