தெலுங்கானா மாநிலம் நார்நுர் மண்டலம், நாகலூ குண்டா பகுதியில் தேவதாஸ் என்பவர் தனது மனைவி சாவித்திரிபாய் மற்றும் 2 மகள்களுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் இவரது இளைய மகள் ராஜேஸ்வரி (வயது 20) அவரது வீட்டின் அருகில் வசிக்கும் இளைஞர் ஒருவரை உயிருக்கு உயிராய் காதலித்து வந்தார்.
இதையடுத்து நாளடைவில் இருவரது வீட்டாருக்கும் இவர்களது காதல் கதை தெரிய வந்துள்ளது. அந்த இளைஞர் வேறு மதத்தை சேர்ந்தவர் என்பதால் இவர்களது காதலுக்கு ராஜேஸ்வரியின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், பெற்றோரை எதிர்த்து ராஜேஸ்வரி தன் காதலனுடன் வேறு ஊருக்கு தப்பித்துச்சென்று திருமணமும் செய்து கொண்டார்.
ராஜேஸ்வரியை பல்வேறு இடங்களில் தேடி வந்த பெற்றோர் அவரை கண்டுப்பிடிக்க முடியாமல் பெரும் ஆத்திரத்தில் இருந்தனர்.
இதையடுத்து ராஜேஸ்வரியின் பெற்றோர் நார்நுர் போலீசாரிடம் மகளை காணவில்லை என புகார் அளித்தனர். இந்நிலையில் இரு நட்களுக்கு முன்பு போலீசார் காணாமல் போன ராஜேஸ்வரி மற்றும் அவரது காதலனை கண்டுபிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து ராஜேஸ்வரியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் காவல் நிலையம் வந்த ராஜேஸ்வரியின் பெற்றோர் நல்லவிதமாக பேசி மகளை தங்களது வீட்டிற்கு அழைத்துச்சென்றனர். மேலும் காதலனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க | எஸ்.ஜே. சூர்யா-வுக்கு இந்த கோடிகள் வரி பாக்கியா ? எச்சரித்த நீதிமன்றம்!
இந்நிலையில், நேற்று அதிகாலை ராஜேஸ்வரியின் பெற்றோர் போலீஸாருக்கு போன் செய்து தங்களது மகள் தற்கொலை செய்துக்கொண்டதாக தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் போலீஸார் ராஜேஸ்வரியின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு ராஜேஸ்வரி கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். பின்னர் அவரது உடலை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சுற்றத்தார் கூறுகையில், பெற்றோரே ராஜேஸ்வரியின் உயிரிழப்புக்கு காரணம் என்று தெரிவித்தனர். அதே போல், போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் ராஜேஸ்வரி வற்புறுத்தப்பட்டு, கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தேவதாஸ், சாவித்திரி பாய் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க | தயாநிதி - அஜித் சந்திப்பு ஏன்?... உருவாகிறதா மங்காத்தா 2
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR