இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போர் விமானம் பெங்களூருவில் நடைபெற்ற விழாவில் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ளது. 2003-ம் ஆண்டு முதல் எதிர்பார்க்கப்பட்ட முற்றிலும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட இலகுரக போர் விமானமான தேஜாஸ் போர் விமானம் இன்று இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த தேஜஸ் போர் விமானம், உலகின் மிகவும் எடை குறைந்த போர் விமானங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்திய விமானப்படையில் கடந்த ஆண்டு முறைப்படி சேர்க்கப்பட்ட தேஜஸ் போர் விமானங்களின் முதல் தொகுப்பு பெங்களூரில் உள்ள இந்திய விமானப்படையில் இன்று இணைக்கப்பட்டது.
இந்த இணைப்பு தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள ராணுவ மந்திரி மனோகர் பரிக்கர்:- முற்றிலுமாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானங்கள் விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ள இந்த தருணம் நாட்டுக்கு பெருமிதமான தருணமாகும். நமது விமானப்படையின் பலத்தை தேஜஸ் புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும் என குறிப்பிட்டுள்ளார்.