AIR INDIA நிறுவனம் TATA குழுமம் வசம் செல்லுமா... !!!

விமான நிறுவனத்தை இயக்கி வரும் டாடா குழுமம், ஆரம்பம் முதலே டாடாவுக்கு சொந்தமான ஏர் இந்தியாவை வாங்க ஆர்வம் காட்டியுள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 9, 2020, 01:46 PM IST
  • கோவிட் -19 தொற்றுநோய் பரவல் காரணமாக உலகளவில் விமான நிறுவனங்கள் கடுமையான சிக்கலில் உள்ளன.
  • கோவிட் -19 க்கு முன்னரே, நீண்ட காலமாக ஏர் இந்தியா கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறது.
  • விமான போக்குவரத்து துறையில் டாடா குழுமம் தனக்கென ஒரு இடத்தை வைத்துக் கொண்டுள்ளது
AIR INDIA நிறுவனம் TATA குழுமம் வசம் செல்லுமா... !!! title=

புதுடெல்லி( New Delhi): கடந்த பல மாதங்களாகவே, அரசு விமான சேவையை தனியார் கைகளில் கொடுப்பது பற்றி பேசப்படுகிறது என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். ஆனால் இப்போது அரசு விமான நிறுவனமான ஏர் இந்தியாவை  டாடா சன்ஸ் (Tata Sons)  வாங்க முடியும் என்று தெரிகிறது. ஏர் இந்தியா நிறுவனத்தை ஏலம் எடுப்பதற்கான கடை தேதிக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில்,  டாட்டா குழுமம் (Tata Group) மட்டுமே இதை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது.

ALSO READ | ஜம்மு காஷ்மீரில் 6 புதிய பாலங்கள்: ராஜ்நாத் சிங் இன்று திறந்து வைக்கிறார்

ஏற்கனவே விமான நிறுவனத்தை இயக்கி வரும் டாடா குழுமம், ஆரம்பம் முதலே டாடாவுக்கு சொந்தமான ஏர் இந்தியாவை வாங்க ஆர்வம் காட்டியுள்ளது. இருப்பினும், கோவிட் -19 தொற்றுநோய் பரவல் மற்றும் அதன் விளைவாக விமான போக்குவரத்து மற்றும் சுற்றுலாவில் ஏற்பட்ட பின்னடைவுகள் மற்றும் பாதிப்புகள் காரணமாக உலகளவில் விமான நிறுவனங்கள் கடுமையான சிக்கலில் உள்ளன.

டாடா குழுமம், ஏர் இந்தியாவை வாங்கலாம் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், கோவிட் -19 பரவல் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சனைகள் காரணமாக ஏர் இந்தியாவை வாங்கும் முயற்சியில் டாடாவுடன் இணைய மறுத்துவிட்டது. ஏலத்திற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31 ஆகும். மேலும் இந்த தேதியை நீட்டிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ALSO READ |  அதிர்ச்சி!! காஷ்மீரில் பாஜக தலைவர், அவரது தந்தை மற்றும் சகோதரர் சுட்டுக் கொல்லப்பட்டனர்

 

கோவிட் -19 க்கு முன்னரே,  நீண்ட காலமாக ஏர் இந்தியா கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறது. தொற்றுநோயின் தாக்கம் இந்த பிரச்சனையை அதிகரித்துள்ளது. குறிப்பாக விமானத் துறையில், அதன் நிதி நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. டாடா ஏர்லைன்ஸ்  என்பது விஸ்தாரா மற்றும் ஏர் ஏசியா  என இந்தியாவில் வளர்ந்து வரும் விமான நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக 2018 ஆம் ஆண்டில் ஏர் இந்தியாவை விற்கும் அரசின் முஇயற்சி தோல்வி அடைந்தது. ஜனவரி மாதத்தில் இதற்கான நடவடிக்கையை அரசு மீண்டும் தொடங்கியது.

ஏர் இந்தியாவை வாங்க நிறுவனக்களை ஈர்க்கும் முயற்சியில், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCEA) மார்ச் 4 ம் தேதி, வெளிநாடு வாழ் இந்தியர்களும் ஏர் இந்தியாவில் 100 சதவீத பங்குகளை வைத்திருக்கலாம் என அனுமதித்தது.

அதுவரை, என்.ஆர்.ஐ.க்கள் ஏர் இந்தியாவில் 49 சதவீதம் மட்டுமே முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டன. இருப்பினும், ஏர் இந்தியாவில் அந்நிய நேரடி முதலீட்டு (FDI) வரம்பை அமைச்சரவை மாற்றவில்லை, இது தற்போது 49 சதவீதமாக உள்ளது.

டாடா  ஏர்லைன்ஸ் (TATA Airlines) மற்றும் நீண்டகால தேசியமயமாக்கப்பட்ட ஏர் இந்தியா முதல் ஏர் ஏசியா (Air Asia) மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) மற்றும் விஸ்டாரா ஆகிய நிறுவங்களில் உள்ள பெரும் பங்குடன் விமானத் துறையில் டாடா நிறுவனம் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

விஸ்தாரா ( Vistara) 2019 ஆம் ஆண்டில் ஒன்பது போயிங் 737-800 என்ஜி விமானங்களை தனது கடற்படையில் சேர்த்து கணிசமாக  அளவு விரிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம் அதன விமானங்களின் எண்ணிக்கை  31 ஆக உயர்ந்தது, நிறுவனம் தனது நெட்வொர்க்கை  50 சதவீதத்திற்கும் மேலாக விரிவாக்க உதவி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News