உத்தரப்பிரதேசம் மாநில பாஜக தலைவராக அம்மாநில ஓ.பி.சி பிரிவு தலைவராக செயல்பட்டு வந்த ஸ்வதந்திரா தேவ் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களின் புதிய பாஜக தலைவர்களை நியமித்து அக்கட்சித் தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி உத்தரப்பிரத்சே மாநில பாஜக தலைவராக பதவி வகித்து வந்த மகேந்திர நாத் பாண்டே அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, புதிய தலைவராக ஸ்வதந்திரா தேவ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்வதந்திரா தேவ் சிங் முன்னதாக அம்மாநிலத்தின் ஓ.பி.சி பிரிவினரின் தலைவராக இருந்தார்.
குர்மி சமூகத்தைச் சேர்ந்தவரை தலைவராக நியமித்ததன் மூலம் பிற்படுத்தப்பட்டோர் வாக்குகளை தக்க வைக்க முடியும் என பாஜக கருதுகிறது. உத்தரப்பிரதேசத்தில் தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத் முதல்வராக இருந்து வருகிறார். அவரது நியமனங்களில் தாக்கூர் சமூகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக பிற சமூகங்களில் அதிருப்தி ஏற்பட்டது.
குறிப்பாக பிராமண சமூகத்தினரிடையே இந்த அதிருப்தி அதிகமாக இருந்தது. இதனால் துணை முதல்வராக இருந்த மகேந்திரநாத் பாண்டேவை பாஜக தலைவராக அறிவித்தது. இந்நிலையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மகேந்திரநாத் பாண்டே வெற்றி பெற்று மத்திய அமைச்சரவையில் இடம்பிடித்தார்.
இதையடுத்து உத்தரப்பிரதேசத்தின் புதிய பாஜக தலைவர் யார் என்கிற கேள்வி எழுந்தது. எம்.எல்.சியாக இருக்கும் லக்ஷ்மண் ஆச்சார்யா அல்லது எம்.பி மகேஷ் சர்மா இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் குர்மி சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர் சுதேந்திரதேவ் சிங், பாஜகவின் உத்தரப்பிரதேச மாநில புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். Mangal Prabhat Lodha appointed as the President of Mumbai Bharatiya Janata Party (BJP). #Maharashtra https://t.co/UC9mCEHkr1
— ANI (@ANI) July 16, 2019
அதேபோன்று மகாராஷ்டிரா மாநிலத்தின் பாஜக மாநில தலைவராக இருந்த ராவ்சாஹிப் பாட்டீல் தான்வே தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, சந்திரகாந்த் பாட்டீல் மகாராஷ்டிர மாநிலத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளனர்.